
Shui இனமும், சீனாவில் ஒப்பீட்டளவில் ஒரு சிறிய இனம். 4 லட்சத்துக்குட்பட்ட இவ்வினத்தவர் முக்கியமாக தென்மேற்கு சீனாவின் அடர்ந்து மலைத்தொடரில் வாழ்கின்றனர். முன்பு, இவ்வினத்துக்கும் அங்குள்ள வேறு பல இனங்களுக்குமிடையே தொடர்பு குறைவு. பகைமை உணர்வு கடுமையாக இருந்தது. Shui இனத்தவர் மக்கள் தொகை குறைவு. வெளியுலகுடன் தொடர்பு கொள்ளாமல் இருந்தனர். மற்ற இனங்களுடன் திருமண உறவு கொள்ளவில்லை. பொருளாதார பரிமாற்றமும் கிடையாது. நவ சீனா நிறுவப்பட்ட பின், Shui இனத்துக்கும் இதர தேசிய இனங்களுக்குமிடையே யுள்ள உறவில் பெரும் மாற்றம் காணப்பட்டுள்ளது என்று, Shui இனத்தைச் சேர்ந்த அரசியல் கலந்தாய்வு மாநாட்டு உறுப்பினர் Wei Jie Zheng அறிமுகப்படுத்தினர். அவர் கூறியதாவது:

"அரசின் தேசிய இனக்கொள்கைக்கு முதலில் நன்றி தெரிவிக்க வேண்டும். பல்வேறு தேசிய இனங்களும் சமநிலையில் இருக்கின்றன. வளர்ச்சிக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றது. இவ்வாறு Shui இன மக்களின் சுயமதிப்பும் பெருமையும் வலுப்பட்டுள்ளன. அடுத்து, தேசிய இனப் பிரதேச கல்விக்கான முதலீட்டை அரசு அதிகரித்துள்ளது. தேசிய இனங்களிடையே கல்வி பெற்றுள்ள மக்கள் தொகை விகிதம் பெருமளவில் உயர்ந்துள்ளது. அறிவியல் கருத்திலும் கல்வி அறிவிலும் மாபெரும் மாற்றம் காணப்பட்டுள்ளது. தவிரவும், தேசிய இனங்களுக்கிடையே உறவு மேலும் மேம்பட்டுள்ளது. பல்வேறு தேசிய இனங்களும் சீன தேசிய இனக்குடுமபத்தில் ஒரு உறுப்பாக திகழ்கின்றன. அனைவரும் ஒன்றுபட வேண்டும். பரஸ்பரம் அன்பும் மதிப்பும் காட்ட வேண்டும். ஒருவருக்கு ஒருவர் உதவிட வேண்டும். ஆதரவளிக்க வேண்டும். கூட்டாக வளர்ச்சியடைய வேண்டும். இது, மென்மேலும் வலுவான ஒரு கருத்தாகியுள்ளது" என்றார் அவர்.
|