கடந்த 5 ஆண்டுகளில், சீனாவில் ஒட்டுமொத்த தானிய உற்பத்தி ஆற்றல் உயர்ந்து, தானிய உற்பத்தியில் பெரும் திருப்புமுனை காணப்பட்டுள்ளது. தானியம் பயிரிடப்படும் நிலப்பரப்பு குறைந்து வரும் நிலைமை மாறியுள்ளது. சீன வேளாண் துறை அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட செய்தி இதை கூறுகின்றது. இதற்கிடையில், மொத்த உள் நாட்டு தானிய விளைச்சல் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு, தானியம் பயிரிடப்பட்ட நிலப்பரப்பு, 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட சுமார் 40 லட்சம் ஹெக்டர் குறைவு. இருந்த போதிலும், மொத்த தானிய விளைச்சல் 4 விழுக்காடு அதிகரித்துள்ளது.
|