
இவ்வாண்டு சீனாவின் 200க்கு அதிகமான நடுத்தர மற்றும் பெரிய நகரங்களில் அனாதைக் குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் நிறுவப்படும். தற்போது, சீன சிவில் துறை அமைச்சகமும், பல்வேறு உள்ளூர் அரசுகளும் 10 கோடி யுவான் நிதியை ஒதுக்கீடு செய்து, சுமார் 130 பராமரிப்பு மையங்களை நிறுவியுள்ளன. இவற்றில் கடந்த 3 ஆண்டுகளில், 2 லட்சத்து 40 ஆயிரம் அனாதை குழந்தைகள் பராமரிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக, அனாதைக் குழந்தைகளைப் பராமரிக்கும் வசதிகளை உருவாக்குவது தேசிய பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
|