• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-02-07 18:57:07    
பூசணிப் பஜ்ஜி தயாரிப்பு

cri

கலை.....வணக்கம் நேயர்களே. இன்றைக்கு சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியில் ஒரு புதுமையான உணவு அறிமுகப்படுத்தப் போகிறேன். அதன் பெயர் பூசணிக்காய் பஜ்ஜி

ரா.....ஆகா எனக்கு பஜ்ஜி மிகவும் பிடிக்கும். ஆமா. புத்தாண்டு விருந்துக்காக நாம் அனைவரும் ஒரு விடுதிக்குப் போயிருந்த போது அங்கே பிங்கர் சிப்ஸ் போல ஒரு உணவு பரிமாறினார்களே அதைச் சொல்கிறீர்களா?

கலை....அது பிஜ்கர் சிப்ஸ் இல்லை. பூசணிக் காயில் செய்யப்பட்ட பஜ்ஜி. என்ன செய்யு சாப்பிடலாமா?

ரா....ஓ தாராளமாக. பஜ்ஜி சுடுவதற்கு கடலைமரவு வேணுமே. சீனாவில் கிடைக்காதே.

கலை.....கவலைப்பட வேண்டாம். முட்டை இருக்க பயமேன்.

ரா.....பஜ்ஜியிலும் முட்டையா?சைவ உணவுப் பிரியர்கள் பாவம். சரி என்னென்ன பொருட்கள் வேணும் சொல்லுங்க.

கலை....பூசணிக்காய் அரை கிலோ. முட்டையின் மஞ்சள் கரு. இதற்கு இரண்டு முட்டைகள் தேவை. அப்புறம் உணவு எண்ணெய் பஜ்ஜி பொரிக்க.

ரா....சரி எல்லா பொருட்களும் கொண்டு வந்தாச்சு. இனி பஜ்ஜி சுட்டுக் கொடுங்க.

கலை.....முதலில் பூசணிக் காயை நன்றாக விரை நீஜ்ஜி சுத்தம் செய்யணும். தோலை நீக்கணும். பிறகு பூசணிக்காயை சிறுசிறு துண்டுகளாக பிஜ்சர் சிப்ஸீக்கு உருளைக்கிழங்கை நறுக்குவது போல நீளவாக்கில் நறுக்க வேண்டும். அப்புறம் இரண்டு முட்டைகளின் மஞ்சள் கருவை நன்றாக கலக்குமாறு அடிக்கணும்.

ரா......சரி, இனி, அடுப்பில் வாணலியை ஏற்றி உணவு எண்ணெயை சூடு பண்ணானுமா?

கலை.....ஆமாம். எண்ணஎய் சுட்டதும் பூசணிக்காய் துண்டுகளை ஒவ்வொன்றாக கலக்கப்பட்ட முட்டை மஞ்சள் கருவில் முக்கி எடுத்து வாணலியில் போட்டு பொரிக்கணும். ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் புரட்டிப் போடணும். நன்றாக பொரிந்ததும் மஞ்சள் நிறத்தில் பூசணிக்காய் பஜ்ஜி இருக்கும். அதை எடுத்து தட்டில் போடணும்.

ரா....இனி சாபர்பிடலாமா? பஜ்ஜி என்றால் கொஞ்சம் காரமாக இருக்கணுமே. இது காரமாக இல்லையே.

கலை.....காரமாக இருக்காது. பூசணிக்காய் இனிப்பு. முட்டை கொஞ்சம் உப்பு. இரண்டும் சேர்ந்து உப்பாகவும் இனிப்பாகவும் இருக்கும். வித்தியாசமான சுவை சரி நேயர்களே இந்த பூசணிக்காய் பஜ்ஜி செய்து சாப்பிட்டு சுவை எப்படி என்று எழுதுங்கள்.