சீனாவில் மேற்குப் பகுதிக்கான பெரும் வளர்ச்சி நெடுநோக்கு திட்டம் நடைமுறைக்கு வந்தது முதல், கடந்த ஆண்டு வரை, மேற்கு பகுதியில் மொத்தம் ஒரு லட்சத்து 60 ஆயிரம் கோடி யுவான் நிதியை சீன மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த ஆண்டு வரை, மேற்கு பகுதியில், 70 முக்கிய திட்டப்பணிகள் புதிதாக துவங்கப்பட்டு, மொத்தம் ஒரு லட்சம் கோடி யுவான் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் பொருளாதார வளர்ச்சி விகிதம் தொடர்ந்து உயர்ந்து வருகின்றது. கடந்த ஆண்டின் இறுதி வரை, மேற்கு பகுதியில், 56 லட்சம் ஹெக்டர் விளை நிலங்கள் மீண்டும் காடுகளாக மாற்றப்பட்டுள்ளன. சுமார் ஒரு கோடியே 90 லட்சம் ஹெக்டர் பரப்பில் புல்வெளி பாழாவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
|