சிறுபான்மை தேசிய இன வட்டாரங்களில் உள்ள இடைநிலை மற்றும் துவக்கப் பள்ளிகளில் கல்வி வசதிகளை மேம்படுத்தும் வகையில், கடந்த சில ஆண்டுகளாக, ஆண்டுதோறும், ஒரு கோடி யுவான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று எமது செய்தியாளர் கூறுகிறார். மேற்கு பகுதி கிராமப்புறங்களில் இடைநிலை மற்றும் துவக்கப் பள்ளிகளின் இடிந்த கட்டிடங்களை சீரமைக்கும் திட்டத்தையும், நவீன தொலை தூர கல்வி திட்டத்தையும் செயல்படுத்திட, நிதியை விநியோகிக்கும் போது, சிறுபான்மை தேசிய இன பிரதேசத்துக்கு மத்திய நிதித்துறை, முன்னுரிமை வழங்குகின்றது என்று சீன நிதி அமைச்சகத்தின் அதிகாரி தெரிவித்தார்.
|