• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-02-06 16:17:58    
கருப்பு மற்றும் வெள்ளை இன இரட்டை குழந்தைகள்

cri

ஜெர்மனியின் லாய்பிசி நகரில் உள்ள ஒரு தம்பதி அண்மையில் உள்ளூர் மருத்துவமனையில் ஒரு ஜோடி அருமையான இரட்டை குழந்தைகளைப் பெற்றுக்கொண்டனர். அவற்றில் ஒரு குழந்தை கருப்பு. இன்னொரு குழந்தை வெள்ளை. இது மருத்துவர்களுக்கு ஆச்சரியம் தந்தது. ஏனெனில் இது போன்ற இரட்டை குழந்தைகள் உலகில் காண்பது அரிது.

அலையோடு பாயும் எலிகள்

சாஎன் வெல்மோத் என்னும் ஆஸ்திரேலியர் ஒருவர், கடலில் நீந்துவதற்கு மூன்று எலிகளுக்கு சிறப்புப் பயிற்சி அளித்தார்.

பெரிய அலையில் தாவிப்பாய்ந்து நீந்தும் இந்த எலிகளை எளிதில் கண்டறிய, அவர் இந்த மூன்று எலிகளுக்கு வெவ்வேறான சாயங்களைத் தோய்த்தார்.

என்பதெட்டு மணி நேரம் பாடம் நடத்தும் ஆசிரியர்

நாற்பதிரண்டு வயதான மலேசிய ஆசிரியர் ஒருவர் அண்மையில் நீண்ட நேரம் இடைவிடாமல் பாடம் நடத்தும் புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார். கடந்த டிசெம்பர் திங்கள் இருபதைந்தாம் நாள் முதல் அவர் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு தொடர்ந்து என்பதெட்டு மணி நேரம் இலக்கணமும் இலக்கியமும் விளக்கிக் கற்றுத் தந்தார். உண்மையில் இவ்வாறு செய்வதற்கு மருத்துவர் தடை விதித்தார். இருப்பினும், இதன் மூலம் கல்வி பணியின் மீதான என் அன்பை காட்டுவதென நான் உறுதி பூண்டுள்ளேன் என்றார் அவர்.

போலி பொருட்களை வாங்குவது குற்றம்

போலிப் பொருட்களை வாங்கினால் அது ஒரு வகையான குற்றம் என்று மெக்சிகோவின் பிரதிநிதிகள் அவை அண்மையில் அங்கீகரித்த சட்டம் கூறுகிறது. போலி பொருட்களை வாங்குவோருக்கு சுமார் நானூற்று என்பது அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்படும். மீண்டும் போலி பொருட்களை வாங்கினால் முப்பதாறு மணி நேரம் சிறை தண்டனை விதிக்கப்படுவர் என்று அச்சட்டங்கள் கூறுகின்றன.

அதிகம் வியர்க்கும் நகரம்

அமெரிக்காவிலேயே மிக அதிக அளவு வியர்க்கும் நகரமாக டெக்சாஸ் மாநிலத்தின் எல்பாசோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இங்கு கோடை வெய்யில் 93 டிகிரி பாஃரன் ஹீட்டை விட அதிகம். அது போன்று காற்றில் உள்ள ஈரப்பதத்தின் அளவு எழுப்பது சதவீதத்திற்கு அதிகமாக உள்ளது. இந்த ஆய்வுக்கு நூறு நகரங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

உலகெங்கும் தட்பவெப்ப சூழல் மாறிவருகிறது. இதை யொட்டி பல நாடுகளின் வெப்ப நிலையிலும் மாறுதல் ஏற்பட்டு உள்ளது.