• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-02-06 16:17:26    
சீனாவின் சேவைத் துறை

cri

உணவுக்கு ஆர்டர் கொடுக்கும் இணையத்தளம் 

சேவைத்துறை, தற்போதைய பொருளாதார வளர்ச்சியில் முக்கிய ஆற்றலாக மாறியுள்ளது. சில வளர்ந்த நாடுகளின் உள்நாட்டு உற்பத்தியில் சேவைத்துறையின் வளர்ச்சி, 60 விழுக்காட்டுக்கும் அதிகமாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் சீனாவில், உணவகம், விற்பனை, சுற்றுலா, நிதி முதலிய சேவைத்துறைகள் விரைவாக வளர்ச்சியடைந்துள்ளன.

வீட்டில் இருந்தபடியே இணைய தளத்தின் மூலம் உணவை வாங்கி, உணவகம் உணவுப்பொருட்களை அனுப்புவதைக் கண்ட பிறகு, தென் சீனாவிலுள்ள சென்சான் நகரில் வேலை செய்யும் லீ ஹுவே அம்மையார் அண்மையில் மிகவும் மகிழ்ந்தார். அவர் கூறியதாவது:

விடுமுறையில் சமைப்பதையும், வெளியே சென்று சாப்பிடுவதையும் விரும்ப வில்லை. இணைய தளத்தைப் பார்க்கும் போது, உணவுப் பொருளின் பெயரை நேரடியாக எழுதி, தொடர்புடைய உணவகத்தைத் தேடிப்பிடிக்கலாம். இது மிகவும் வசதியாக இருக்கிறது என்றார் அவர்.

முன்பு, தொலைபேசி மூலம் உணவுக்கு ஆர்டர் கொடுத்து வாங்கியது, வசதியாக இல்லை. இணைய தளத்தில் உணவகத்தின் முகவரியைப் பார்க்கும் போது, உணவுப் பொருளின் பெயர் பட்டியல், விலை, விலைத்தள்ளுபடி முதலியவற்றை முழுமையாக அறிந்துகொள்ளலாம் என்று லீ ஹுவேய் கூறியுள்ளார்.

தற்போது சீனாவில், சேவைத்துறையினால் வாழ்க்கையில் வசதியை கொண்டுவந்த நிகழ்ச்சிகள் மிகவும் அதிகம். சீன மக்களின் வருமானம் அதிகரிப்பதுடன், உடை, உணவு, வீடு, போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில், மக்களுக்குத் தேவைப்படும் சேவை, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இந்தத் தேவைகளினால், சீனச் சேவைத்துறையின் வளர்ச்சி விரைவுப்படுத்தப்பட்டது.

சீனப் பொருளாதார வளர்ச்சியின் உண்மை கட்டமைப்பு, நியாயமாகவும் சீராகவும் இருப்பதை, சேவைத்துறை பெற்றுள்ள விழுக்காட்டின் அதிகரிப்பு பிரதிபலிக்கிறது என்று சீனத் தேசிய புள்ளிவிபர ஆணையத்தின் இயக்குநர் லீ தேய் சூய் கருத்து தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

சீனப் பொருளாதார வளர்ச்சி, தொழில் துறையினால் குறிப்பாக தயாரிப்பு துறையினாலும், வலிமையான ஏற்றுமதியினாலும் அதிகரிக்கிறது என்று, முன்பு உலகில் கூறப்பட்டது. ஆனால், எமது புள்ளிவிபரத்தைப் பார்த்தால், சீனப்பொருளாதார வளர்ச்சியில் சேவைத்துறை மாபெரும் பங்காற்றியுள்ளதை அறியலாம் என்றார் அவர்.

ஆனால், விரைவான வளர்ச்சியோடு, சீனாவின் சேவைத்துறையில் சில பிரச்சினைகளும் நிலவுகின்றன. சேவைத்தரம், பணியாளர்களின் கல்வி அறிவு, குறிப்பாக மக்களின் வாழ்க்கையுடன் நெருக்கமான தொடர்புடைய சேவைத்துறைகளில் இந்த பிரச்சினைகள் இடம்பெறுகின்றன.

காப்பீட்டுத்துறையை ஒரு எடுத்துக்காட்டாக பார்க்கின்றோம். காப்பீட்டை வாங்குவது, ஒரு முதலீட்டு நடவடிக்கையாக, தற்போது சீனாவில் பரந்தளவில் ஏற்றக்கொள்ளப்பட்டுள்ளது. சீனாவின் காப்பீட்டுத்துறை, ஆண்டுக்கு பத்து விழுக்காட்டுக்குக் கூடுதலான விகிதத்தில் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் சீனாவின் காப்பீட்டு வருமானம், 49 ஆயிரம் கோடி யுவானைத் தாண்டியுள்ளது. ஆனால், சீனக்காப்பீட்டு துறை வளர்ச்சிக்கு நம்பிக்கை பிரச்சினை ஒரு தடையாக மாறியுள்ளது. இது குறித்து, சீனக்காப்பீட்டு கண்காணிப்பு மற்றும் நிர்வாக கமிட்டியின் தலைவர் வூ தின் புஃ கூறியதாவது:

அலுவலின் குறுகியக்கால குறிக்கோளை எட்டும் பொருட்டு, சில காப்பீட்டு தொழில் நிறுவனங்கள், சந்தை ஒழுங்கை மீறி, மோசமயமான போட்டியை மேற்கொண்டுள்ளன. இதனால், கூட்டு வளர்ச்சியின் சூழ்நிலைச் சீர்குலைக்கப்பட்டு, ஒருமைப்பாட்டு நலன் அழித்தொழிக்கப்பட்டுள்ளது மட்டுமல்ல, தொழில் நிறுவனத்தின் நீண்டகால சீரான வளர்ச்சிக்கும் துணைபுரியாது என்றார் அவர்.

சேவைத்துறையில் ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து பேசுகையில், சீனச் சேவைத்துறையின் நிலையை உயர்த்தும் பொருட்டு, தொழில் நிறுவனங்கள் சுய கட்டுப்பாட்டை மேலும் வலுப்படுத்தி, சந்தை செயலை முறைப்படுத்த, அரசாங்கம், சட்டங்களை வகுக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தவிர, சேவைத்துறை மற்றும் அதன் அமைப்பு முறை சீர்திருத்தத்தை விரைவுப்படுத்தி, சந்தைப் போட்டியை ஊக்குவிக்க வேண்டும். உணவகம், விற்பனை, சுற்றுலா உள்ளிட்ட பாரம்பரிய சேவைத்துறைகளை தொடர்ந்து வளர்ப்பதோடு, நிதி, தகவல், பின்னணி சேவை முதலிய நவீன சேவைத்துறைகளையும் வளர்க்க வேண்டும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.