• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-02-08 14:20:45    
நாட்டிலே புலி, வீட்டிலே எலி

cri
ஒரு ஊரில் ஒரு பெரிய அதிகாரி வசித்து வந்தார். அவர் வெளியிலேதான் புலி, வீட்டிலே எலி. பொண்டாட்டிக்கு பயந்து சாகிறவர். ஒருநாள், அவர் உடம்பெங்கும் பயங்கரமான காயங்கள். சிராய்ப்புக்கள். அவருடைய பொண்டாட்டி போட்டு புரட்டி எடுத்துவிட்டாள். மறுநாள் அவர் மன்னருக்கு முன்னால் போய் நிற்க வேண்டிய நிலை. அரசு கட்டளையை தட்ட முடியாது அல்லவா? சிராய்ப்புக்களை மறைக்க முடியாமல் போய் நின்றார்.

"அரசே, நேத்து ராத்திரி ஒரே வெப்பமா இருந்திச்சா. திராட்சை கொடிக்கால் தோட்டத்துல போயி நின்னா குளிர்ச்சியா காத்து வீசுமேன்று போயி நின்னேன். திடீர்னு திராட்சைப் பந்தல் என்மேலே சரிஞ்சு விழுந்திருச்சி. அதன் லேசா ரத்தக் காயம்" என்று சாக்குப் போக்குச் சொன்னார்.

இவர் சொல்வது பொய் என்று மன்னருக்கு புரிந்து விட்டது.

"பொய் சொல்லாதே. உன் பொண்டாட்டிதானே இப்படி உன்னை ஆக்கினது. யாரங்கே... போய் இவனோட பொண்டாட்டியை இழுத்துட்டு வாங்க" என்று உத்தரவிட்டார் மன்னர்.

பக்கத்து மண்டபத்தில் பட்டத்து ராணி உட்கார்ந்து ஒட்டுக் கேட்டுக் கொண்டிருப்பது மன்னருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஓடோடி வந்தாள் மகாராணி.

உடனே, "சபை கலைந்தது. எல்லோரும் வீட்டுக்குப் போங்க. இன்னைக்கி என்னோட திராட்சைத் தோட்டம் சரியப் போகுது" என்று சொல்லிவிட்டு மன்னர் அந்தப் புரத்துக்குள் ஓடினார்.

சொல்லும் கலை

ஒரு தொடக்கப் பள்ளியின் வகுப்பறையில் இருப்பது போல ஒரு கனவு கண்டேன். ஒரு கட்டுரை எழுதத் தொடங்குகிறேன். ஆனால் ஒரு கருத்தை எப்படி வெளிப்படுத்துவது எனத் தெரியவில்லை. ஆசிரியரிடம் கேட்கிறேன்.

"அது ரொம்ப ரொம்ப கஷ்டம்" என்று சொல்லியவர் தனது கண்ணாடிக்கு ஊடே ஓரக்கண்ணால் என்னைப் பார்த்தபடியே "உனக்கு ஒரு கதை சொல்றேன்" என்று தொடங்கினார்—

"ஒரு குடும்பத்தில் ஆண் குழந்தை பிறந்த போது குடும்பத்தினர் எல்லோரும் பரவசப்பட்டனர். அந்தக் குழந்தைக்கு ஒரு வயதான போது, அதை வெளியே எடுத்துப் போய் வந்திருந்த விருந்தினர்களுக்குக் காட்டினார்கள்—அவர்கள் குழந்தையைப் பற்றி நல்லதாக நாலு வார்த்தை சொல்லி வாழ்த்த வேண்டும் என்ற எதிர்பார்ப்புதான்—வேறேன்ன?"

"இந்தக் குழந்தை பணக்காரனா வருவான்" என்று ஒருவர் சொன்னதும் அவருக்குத் திரும்பத் திரும்ப நன்றி கூறினார்கள்.

"இந்தக் குழந்தை பெரிய அதிகாரியா வருவான்" என்று இன்னொருவர் சொன்ன போது, அவருக்கும் நன்றி சொல்லி பாராட்டினார்கள்.

"இந்தக் குழந்தை செத்துப் போதும்" என்று ஒருவர் சொன்னதும், குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து அவரை அடித்து நொறுக்கிவிட்டனர்.

"அந்தக் குழந்தை சாகப் போவது நிச்சயம். அதைத் தவிர்க்க முடியாது. அவன் பணக்காரனாவான் என்றோ, பெரிய அதிகாரியாக வருவான் என்றோ சொல்வது பொய்யாகக் கூடும். ஆனாலும் பொய்க்குதான் பராட்டுக் கிடைக்கிறது. உண்மையைச் சொல்லும் போது அடிதான் கிடைக்கிறது. நீ..."

"நான் பொய் சொல்ல விரும்பலை அய்யா. ஆனால், அடிவாங்கவும் விரும்பலை. நான் என்ன சொல்லணும்?"

"அப்படியானால், நீ என்ன சொல்லணும்னா ஆகா, இந்தக் குழந்தையைப் பாருங்க... நான் என்ன சொல்றேன்னா... ஆகா... ஒ... ஹெ ஹெ! ஹி ஹி..."