• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-02-09 18:11:09    
உலக கோப்பைக்கான குறுகிய தூர நீச்சல் போட்டி

cri

பெப்ரவரி 4ஆம் நாள் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நிறைவடைந்தது. அமெரிக்க அணி 6 தங்கப் பதக்கங்களைப் பெற்று முதலிடம் வகிக்கின்றது. சீன அணி இந்த முறை பல இளைஞர்களை அனுப்பியதால் ஒரு தங்கப் பதக்கத்தையும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றது. ஆடவருக்கான 200மீட்டர் வண்ணத்துப்பூச்சி நீச்சப் போட்டியில் சீன வீர்ர் வூ பொங் சாம்பியன் பட்டம் பெற்றார். மகளிருக்கான 200 மீட்டர் தவளை பாணி நீச்சல் போட்டியில் சீன வீராங்கனை லீ சின் குவா வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

ஜனவரி 29ஆம் நாள் நிறைவடைந்த கிரோஷிய மேசைப் பந்து ஒப்பன் போட்டியில், சீன அணி மூன்று சாம்பியன் பட்டங்களைப் பெற்றது. மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை கோ யே மிகவும் சிறப்பாக விளையாடியதால் உலகில் புகழ் பெற்ற சீன வீராங்கனை சாங் யீ நிங்கைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றார். ஆடவர் இரட்டையர் இறுதிப் போட்டியும் மகளிர் இரட்டையர் இறுதிப் போட்டியும் சீன வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கிடையில் நடைபெற்றன. இறுதியில் சீன வீரர்களான சென் ச்சி, வாங் ஹௌ ஜோடி தங்களது சகநாட்டவர்களான லெய் சென் ஹுவா, லீ பிங் ஜோடியைத் தோற்கடித்து ஆடவர் இரட்டையர் போட்டியின் சாம்பியன் பட்டம் பெற்றது. சீன வீராங்கனைகளான சாங் யீ நிங், லீ நான் ஜோடி தங்களது சக நாட்டவர்களான லீ சியோ சியா, கோ யே ஜோடியைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது. பைலோ ரஷியாவின் வீரர் சம்சோனோவ் சீன வீரர் சென் ஜியைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.

ஆஸ்திரேலிய டென்னிஸ் ஒப்பன் போட்டி ஜனவரி 29ஆம் நாள் நிறைவடைந்தது. ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் உலக வரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ள சுவீட்சர்லாந்தின் பெட்டரெர் சைப்பிரஸின் பாக்தாதிஸைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றார். இது அவர் மூன்றாவது முறை பெற்ற இந்த சாம்பியன் பட்டமாகும். பிரெஞ்சு வீராங்கனை மௌரெஸ்மோ மகளிர் ஒற்றையர் சாம்பியன் பட்டம் பெற்றார். உலகப் புகழ்பெற்ற சிங்கிஸ் இந்த விளையாட்டு அரங்கிற்கு மீண்டும் திரும்பிய ஒரு திங்களுக்குப் பின், இந்திய வீரர் மகேஷ் பூபதியுடன் இணைந்து கலப்பு இரட்டையர் போட்டியின் சாம்பியன் பட்டம் பெற்றார். அமெரிக்க வீரர்கள் ஆடவர் இரட்டையர் போட்டியின் சாம்பியன் பட்டத்தையும் சீன வீராங்கனைகள் செங் ஜே, யான் சு ஜோடி மகளிர் இரட்டையர் போட்டியின் சாம்பியன் பட்டத்தையும் பேற்றனர்.