• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-02-07 22:39:10    
வீரசைவம்-என்ன காரணம்?

cri

"உங்கள் வாய்வழியே வயிற்றுக்குள் போவது எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் வாய் வழியாக வெளியே வருவது உண்மையாகவே இருக்கட்டும்," என்று கிறிஸ்தவ மறைநூல் விவிலியம் கூறுகிறது. இந்த லைசென்ஸைக் கூடப் பயன்படுத்தாமல் பாவ்லோ போன்றவர்கள் தீவிரமான வீரசைவமாக இருப்பதற்கு என்ன காரணம்?

ஒன்று மத நம்பிக்கை-மனிதனுடைய உணவுப் பழக்கங்களை மதம் கட்டுப்படுத்துகிறது. ஆனால் ஒவ்வொரு மதமும், ஒவ்வொரு மதத்தின் உள்பிரிவுகளும் சைவம், அசைவம் என்பதற்கு வெவ்வேறு வரையறைகளை வகுத்துள்ளன. இந்துக்களில் ஒரு பிரிவினர் முட்டை கூடத்தின்னாமல் தீவிரசைவமாக இருக்கும் போது, இன்னொரு பிரிவினர்-வங்காளிகள்-மீனை கடல் வாழைக்காய் என்று கூறி சைவப்பட்டியலில் சேர்க்கிறார்கள். வேறு சிலரோ, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இறைச்சி வாசனை அண்டக் கூடாது என்கிறார்கள். கண்ணப்ப நாயனார் போன்ற வேடர்களோ, இறைவனுக்கே கறிசமைத்துப் படைக்கிறார்கள். முஸ்லிம்கள் எல்லாக்கறியும் சாப்பிடுகிறார்கள்-பன்றிக்கறி தவிர. ஈராயிரம் ஆண்டுகளாக புத்தமதம் தழைத்தோங்கும் சீனாவில், இறைச்சி உணவு பண்பாட்டின் ஒரு அம்சமாக மாறி விட்டது. சீனாவின் தெருக்களில் சைக்கிள்களைத் தவிர்க்கலாம் என்றால், இறைச்சி உணவையும் தவிர்த்து விடலாம் என்று கூறினார். ஒரு மேற்கத்தியப் பத்திரிகையாளர். மேலும், செல்வம், நல்ல உடல் ஆரோக்கியம் இவற்றிற்கு அடையாளமாக இறைச்சி உணவு கருதப்படுகிறது. இறைச்சி கலவாத உணவை ஏழைகள் தான் சாப்பிடுவார்கள் என்ற நம்பிக்கை இன்னமும் பரவலாக சீனாவில் நிலவுகிறது.

மக்களில் ஒரு பிரிவினர் தீவிர சைவமாக இருப்பதற்கு இன்னொரு முக்கிய காரணம் ஒழுக்கம் அல்லது அறம் சம்பந்தப்பட்டது. சுற்றுச்சூழலின் மேல் உள்ள அக்கறையும் இன்னொரு காரணம். முன்பு நல்ல நாளும், பொழுதுமாக கிராமத்தில் எங்காவது ஓரிடத்தில் ஒன்று அல்லது இரண்டு ஆடுகளை வெட்டுவார்கள். ஊரில் எல்லோரும் இறைச்சியை பங்கு போட்டு சமைத்துச் சாப்பிடுவார்கள். இப்போது இறைச்சி உணவு ஒரு தொழிலாக மாறி விட்டது. எப்போதோ வெட்டிய ஆட்டை துண்டு போட்டு, டின்களில் அடைத்தும், உறைவித்தும் விற்கிறார்கள். இப்படி இறைச்சி உணவு தயாரிப்பதால் சுற்றுச்சூழலுக்கு பல பிரச்சினைகள் உண்டாகிறதாம். பெருகும் தேவைக்கு ஏற்ப ஏராளமாக இறைச்சி தயாரிக்க ஏகப்பட்ட தண்ணீர், கால்நடைத் தீவனம், நிலம் தேவைப்படுகிறது. இதன் கழிவுகளால் சுற்றுச்சூழல் சீர்கெடுகிறது. ஒரு கிலோ கோதுமை விளைவிக்க சுமார் 900 லிட்டர் தண்ணீர் போதும், ஆனால் ஒருகிலோ மாட்டுக்கறி தயாரிக்க இருபதாயிரம் முதல் ஒருலட்சம் லிட்டர் வரை தண்ணீர் தேவை என்று உணவு வேளாண் அமைப்பு மதிப்பிட்டுள்ளது.