• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-02-09 18:28:29    
நெறிவரைத் திட்டம்

cri

நெறிவரைத் திட்டத்தின் ஆங்கில பெயர் ROAD MAP என்பதாகும். உண்மையில் அது ஒரு வரைபடம் இல்லை. பொதுவாக திட்டம் என்பதையே குறிக்கின்றது. எடுத்துக்காட்டாக:மத்திய கிழக்கு சமாதான நெறிவரைத் திட்டம் என்று சொன்னால், பலஸ்தீன-இஸ்ரேல் தகராறு பற்றிய பேச்சுவார்த்தையில் தேக்க நிலையை முறியடிக்கும் வகையில் அமெரிக்க அரசு தலைவர் ஜார்ஜ் புஷ் 2002ம் ஆண்டு ஜுன் திங்கள் மத்திய கிழக்கு கொள்கை பற்றி உரைநிகழ்த்திய போது ஒரு சமாதான திட்டத்தை முன்வைத்தார். பின், மத்திய கிழக்கு பிரச்சினையில் சம்பந்தப்பட்ட 4 தரப்புகளான ஐ.நா, ஐரோப்பிய ஒன்றியம், ரஷியா, அமெரிக்கா ஆகியன புஷ் சமர்ப்பித்த திட்டத்தின் படி அடிப்படையில் ஒரு நெறிவரைத் திட்டத்தை உருவாக்கின. 2003ம் ஆண்டு ஜுன் திங்களில் பலஸ்தீனம், இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய முத்தரப்பும் ஜார்டானில் இந்த நெறிவரைத் திட்டம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வருவதாக அறிவித்தன.

 

எபேக் பூஃசான் நெறிவரைத் திட்டம் என்றால் என்ன 2005ம் ஆண்டு நவெம்பர் திங்கள் 16ம் நாள் தென் கொரியாவின் பூஃசான் நகரில் நடைபெற்ற ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 17வது அமைச்சர்கள் கூட்டத்தில் "எபேக் பூஃசான் நெறிவரைத் திட்டம்"அங்கீகரிக்கப்பட்டது. ஆசிய-பசிபிக் கட்டுப்பாட்டற்ற வர்த்தகம் மற்றும் முதலீட்டு தொடர்பான உருப்படியான அம்சம் இத்திடத்தில் உள்ளன. முக்கிய உறுப்பு நாடுகள் காப்பு வரியைக் குறைப்பது அறிவு சார் சொத்துரிமை பாதுகாப்பு உள்ளிட்ட பல உள்நாட்டு நடவடிக்கைகள் இத்திட்டத்தில் இடம் பெறுகின்றன.

மியமரின் ஜனநாய அரசியல் நெறிவரைத் திட்டம் என்றால் என்ன?2003ம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் மியன்மர் ராணுவ அரசு தேசிய சமரசத்தை உருவாக்கி ஜனநாயக வளர்ச்சியைத் தூண்டும் நோக்கம் உடைய 7 அம்ச ஜனநாய அரசியல் நெறிவரைத் திட்டத்தை முன்வைத்தது. அரசியல் சாசனத்தை வகுக்கும் நாடாளுமன்றத்தை மீண்டும் இயங்கச் செய்வது நாடு முழுவதும் மக்கள் அனைவரும் வரைவு அரசியல் சாசன வரைவு குறித்து வாக்களிப்பது, சட்டத்தின் படி தேர்தலை நடத்தி புதிய அரசை உருவாக்குவது முதலியவை இந்த அரசியல் நெறிவரைத் திட்டத்தில் காணப்படுகின்றன. மியன்மர் ராணுவ அரசு இந்த நெறிவரைத் திட்டத்தை செயல்படுத்துவது மியன்மரின் ஒருமைப்பாட்டுக்கும் வளர்ச்சிக்கும் துணை புரியும். அதேவேளையில் வட்டாரத்தின் அமைதிக்கும் பயன் தரும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.