• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-02-08 08:57:11    
நிகழ்ச்சிகள் பற்றிய நேயர்களின் கருத்து தொகுப்பு

cri
வளவனூரில் இருந்து, முதலில் கே சிவக்குமார் ஜூலைத் திங்கள் நிகழ்ச்சிகளைப் பாராட்டுகிரார். குறிப்பாக, உங்கள் குரல் நிகழ்ச்சியில் திருச்சி காஜாமலை பிரபாகரனின் பேச்சை இவர் வெகுவாகப் பாராட்டியுள்ளார். அடுத்த வ உ கல்பனா நலவாழ்வுப் பகுதியில் சொன்னபடி கைதட்டத் தொடந்துயிருப்பதாகவும், நல்ல பலன் தெரிவதாகவும் எழுதியுள்ளார். மேலும்-நவம்பர் 14 சீன சமூகவாழ்வு நிகழ்ச்சியில், சீனாவில் இந்திய நாட்டிய நாடகம் நடத்துகிறார்கள் என்ற தகவலை அறிய மகிழ்ச்சியாக இருந்தது என்கிறார். வளவனூர் புதுப்பாளையம் எஸ் செல்வம் ஏப்ரல் திங்கள் 5ம் நாள் முதல் நவம்பர் 3ம் நாள் வரை ஒலிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகள் பற்றி 117 கருத்துக் கடிதங்களை எழுதியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிமலை ஏ, என் சிதம்பரம், சீன வானொலி வழங்கும் உலகச் செய்திகள் உயர்வாக இருப்பதாக பாராட்டியுள்ளார். ஈரோடு மாவட்டம் சென்னிமலை செந்தில் குமார், தெரியாத பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள சீனவானொலியின் நிகழ்ச்சிகல் உதவுவதாகக் குறிப்பிட்டுள்ளார். நேயர்கள் எமது ஒலிபரப்பில் காட்டும் ஆர்வத்துக்கு நன்றி. மேலும், எங்கள் நிகழ்ச்சிகள் மூலம் நேயர்கள் பல விஷயங்களை அறிய முடிகிறது என்பது மகிழ்ச்சி தருகிறது. நீலகிரி மாவட்டம் கீழ்குந்தா நேயர் கே கே போஜன், ஏழைமணவர்கள் கல்விகற்க நன்கொடை வழங்கிய ரிக் ஷா ஒட்டுநர் பற்றி சீனப் பண்பாடு நிகழ்ச்சியில் கூறியதைக் குறிப்பிட்டு, தொடர்புள்ள ஒரு சம்பவமாக, கூட்டலூரில் ஒல் பேருந்து உரிமையாளர் பள்ளிகட்ட தனது நிலம் கொஞ்து, நிறைய பண உதவி செய்த கிருஷ்ணய்யர் தற்போது ஏழையாகி விட்டதாகவும், அந்த நிலையிலும் கூடலூர் மக்கள் அவரின் தானத்தை மறக்காமல் கௌரவித்தனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். நேயர் போஜன், ஒவ்வொரு முறையும் சீனாவையும், இந்தியாவையும் தொடர்புப் படுத்தி, தொடர்புடைய சம்பவங்களை எழுதுவது, மற்ற நேயர்களுக்கு பல தகவல்களைத் தருகிறது, அவருடைய ஊக்கத்திற்குப் பாராட்டு. சேலம் செவ்வாய் பேட்டை நேயர் கே பாலாஜி, சீன வானொலி தமிழ்பிரிவின் இளைய தளத்தை ஆங்கில மொழி அடிப்படையில் செயல்பட வைக்குமாறு கோருகிறார். மேலும், பல கனிப்பொறிகளில் சீன மென்மொருள் இணைவது இல்லை என்கிறார். மேலும் இந்திய அரசின் இந்திய மொழிகள் மத்தியமைத்தின் இளைய முகவரி கொடுத்து, அதற்கு சீன தமிழ் ஒலிபரப்பை அறிமுகப்படுத்தலாம் என்று யோசனை கூறியுள்ளார். ஈரோடு எம் சி பூபதி பழைய திரைப்பட பாடல்களை ஒலிபரப்புங்கள் என்கிறார். விழுப்புரம் எஸ் பாண்டியராஜா அக்டோபர் 31 அன்று 15 கருத்துக் கடிதங்கள் அனுப்பி, புத்தாண்டு வாழ்த்திக் கூறியுள்ளார். எங்கள் வீட்டில் இருந்து கொண்டே சீன வானொலி மூலமாக உலகைக் காண முடிகிறது. உலக நிகழ்ச்சிகளை வீட்டிற்குக் கொண்டு வரும் சீன வானொலிக்கு நன்றி என்று எழுதியுள்ளார். தருமபுரி மாவட்டம் ராமியம்பட்டி நேயர் சீ பாரதி, செப்டம்பர் திங்கள் நிகழ்ச்சிகள் பற்றி, 16 விமர்சனக் கடிதங்கள் எழுதியுள்ளார். காளான் கோழி இன்றைச்சிசூப் தயாரிப்பு பற்றி, உணவு அரங்கத்தில் கேட்ட பிறகு தமது வாரம் ஒரு முறை சூப் வைக்க சாமான் கேட்டு தொந்தரவு செய்வதாக கூறிகிறார். விளையாட்டுச் செய்திகளில் இந்தியா பற்றிய செய்திகளையும், விளையாட்டுத் துணைக்குகளையும் ஒலிபரப்புங்கள் என்கிறார்.