• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-02-08 22:45:28    
Guo Luo திபெத் தன்னாட்சி சோ

cri

மேற்கு சீனாவின் சிங் ஹைய்-திபெத் பீடபூமியின் நடுவில், பனி படர்ந்த மலைகள், பனிக்கட்டி ஆறுகள் அங்கும் இங்குமாக பரவிக் கிடக்கின்றன. ஆறுகள், ஏரிகள், சதுப்பு நிலங்கள் அதிகமானவை. இது சீனாவில் மஞ்சள் ஆறு, யாங் சி ஆறு, லெங் சாங் ஆறு ஆகிய மூன்று பெரிய ஆறுகளின் ஊற்றுமூலமாகும். இங்கு சிங் ஹைய் மாநிலத்து Guo Luo திபெத் தன்னாட்சி சோ அமைந்துள்ளது. திபெத் இனத்தைச் சேர்ந்த அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டி உறுப்பினர் Nuo Er De இச்சோவிலான இடையன் குடும்பத்தில் பிறந்தவர். செய்தியாளருக்கு பேட்டி அளிக்கையில், முன்பு போக்குவரத்து வசதியாயில்லை என்ற காரணத்தினால், தமது ஊர், மிகவும் வறிய நிலையில் இருந்தது. பின்னர், அரசின் பெருமளவு முதலீட்டுடன், நெடுஞ்சாலை, பள்ளி, மருத்துவமனை முதலிய அடிப்படை வசதிகள் கட்டியமைக்கப்பட்டுள்ளன. புல்வெளி உயிரின வாழ்க்கைச்சூழலின் கட்டுப்பாட்டையும் பராமரிப்பையும் வலுப்படுத்தியதால் தேசிய இனப்பிரதேசத்தில் உற்பத்தி மற்றும் வாழ்க்கை நிலை பெரிதும் மேம்பட்டுள்ளது என்றார். அவர் கூறியதாவது:

"இப்போது, மக்களின் வருமானம் அதிகரித்துள்ளது. வாழ்க்கை மற்றும் உற்பத்தி நிலை பெரிதும் மேம்பட்டுள்ளது. முன்பு மாடு அல்லது குதிரை மீது சவாரி செய்து வேலை செய்தனர். இப்போது ஒரு குடும்பத்தில் நான்கு அல்லது ஐந்து மோட்டார் சைக்கிள்கள் இருக்கின்றன. கார், சரக்குகளை ஏற்றிச்செல்லும் பெரிய வண்டி எல்லாம் உண்டு. போக்குவரத்து வசதியாயிருக்கிறது. இடையனின் பிள்ளைகளில் 90 விழுக்காட்டினர் பள்ளிக்குப்போகின்றனர். இடைநிலை சிறப்புத்தொழில் பள்ளி, பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கல்வி பயில முடியும். சிலர், மேற்படிப்பு படிக்கின்றனர். தவிரவும், எங்களது 50க்கும் அதிகமான கிராமங்களிலும் பட்டினங்களிலும் சுகாதார நிலையம், மருத்துவ மனை இருக்கின்றன. பொது மக்கள் நோய்க்குச் சிகிச்சை பெறுவதில் பிரச்சினை இல்லாமல் போயிற்று" என்று Nuo Er De தெரிவித்தார்.

தேசிய இனப்பிரதேசத்து பொருளாதார வளர்ச்சியில் அவர் மிகுதியும் கவனம் செலுத்துகின்றார். அங்குள்ள மூலவளத்தின் அகழ்வும் பாதுகாப்பும், கால் நடை பராமரிப்பு, மருத்துவ சிகிச்சை, கல்வி முதலிய பிரச்சினைகள் பற்றி இக்கூட்டத்தில் அவர் தம் கருத்துருக்களை தெரிவித்தார்.