• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-02-10 14:21:06    
நான்காவது தேசிய மகளிர் மற்றும் குழந்தைககள் அலுவல் கூட்டம்

cri

நான்காவது தேசிய மகளிர் மற்றும் குழந்தைகள் அலுவல் கூட்டம் 2005ம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 15ம் 16ம் நாட்களில் பெய்சிங்கில் நடைபெற்றது. சீன தலைமையமைச்சர் வென்யாபாவ் கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். சோஷலிச பொருளாதாரம், அரசியல் ,எழுச்சி மற்றும் இணக்க சமூகத்தை உருவாக்கும் முக்கிய சக்தியாக மகளிரும் குழந்தையும் திகழ்கின்றனர். குழந்தைகள், நாட்டின் எதிர்காலமாகத் திகழ்கின்றன. பல்வேறு பிரதேசங்களும் தொடர்புடைய வாரியங்களும் தேசத்தின் மாபெரும் மறுமலர்ச்சி மற்றும் பன்முக ஓரளவு வசதிபடைதத் சமூகத்தை நிறுவுவதை நிறைவேற்றும் குறிக்கோளுடன், மகளிர் மற்றும் குழந்தை நலத்திட்டத்தின் முக்கியத்துவத்தை போதியளவில் புரிந்து கொள்ள வேண்டும். மகளிர் மற்றும் குழந்தையின் சட்டபூர்வமான உரிமையையும் நலனையும் உண்மையாக பேணிகாக்க வேண்டும், சீன மகளிர் மற்றும் குழந்தைகள் லட்சியம் சீராக வளர தூண்ட வேண்டும் என்று அவர் சுட்டிகாட்டினார். சீனாவின் வெளி நாட்டு திறப்பு மற்றும் சீர்த்திருத்த பணி நடைமுறைப்படுத்தப்பட்ட பின், சீனாவின் மகளிர் மற்றும் குழந்தை லட்சியம் மாபெரும் முன்னேற்றம் பெற்றுள்ளது. ஆனால், மகளிர் மற்றும் குழந்தைகளின் உரிமையையும் நலனையும் பேணிகாப்பதிலும், உண்மையில் ஆணும் பெண்ணும் சமம் என்ற நிலைமையிலும் நாம் மேலும் அதிகமான முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர். பணி புரியும் மகளிரின் இன்னலை தீர்ப்பதில் பல்வேறு அரசுகள் கவனம் செலுத்த வேண்டும். நகரில் மகளிருக்கு மறு வேலை வாய்ப்பு மற்றும் கிராமப்புற மகளிர் பணியை மாற்றுவது பற்றிய தொழில் திறன் பயிற்சியை மேலும் வலுப்படுத்த வேண்டும். பட்டம் பெற்ற மாணவிகள் பணிபுரிவதில் கவனம் செலுத்த வேண்டும். சட்டப்படி மகளிருக்கு சம நிலையான பணிபுரியும் வாய்ப்பை வழங்க வேண்டும். அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாய கல்வி எனும் உரிமை தர வேண்டும். சட்டத்துக்கு புறம்பாக குழந்தைகளை வேலையில் அமர்த்துவதை எதிர்க்க வேண்டும். மகளிர் மற்றும் குழந்தைகளை ஏமாற்றி, கடந்த விற்பனை செய்வது தொடர்பான சட்டக்கு மீறல்களை கடுமையாக ஒடுக்க வேண்டும் என்று வூங்சான்பாவூ வலியுறுத்தினார். மகளிர் மற்றும் குழந்தை லட்சியம், தேசிய பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியின் 11வது ஐந்து ஆண்டு திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும். சீன மகளிர் வளர்ச்சி திட்டம் மற்றும் சீன குழந்தை வளர்ச்சி திட்டம் ஆகியவை முன்வைத்த பல்வேறு குறிக்கோள்களை உரிய காலத்தில் நிறைவேற்றுவதை உறுதிப்படுத்தும் வகையில், சீன அரசு முதலீடு செய்ய வேண்டும் என்று இக்கூட்டம் கோரிக்கை விடுத்தது.