• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-02-11 18:15:38    
குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டி

cri

20வது குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டி இத்தாலியின் துரின் நகரில் நேற்று இரவு துவங்கியது. 84 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் 2500 விளையைட்டு வீரர்கள் துவக்க விழாவில் கலந்து கொண்டனர். முந்தைய ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் மகளிர் குறுகிய பாதை பனிச் சறுக்கல் போட்டியில் தங்க பதக்கம் பெற்ற யான் யான் சீனப் பிரதிநிதிக் குழுவுக்குத் தலைமை தாங்கி 19வது வரிசையில் அரங்கில் நுழைந்த போது மிகவும் வரவேற்கப்பட்டார். சர்வதேச ஒலிம்பிக் அமைப்புத் தலைவர் ரோக் வாழ்த்துரை நிகழ்த்துகையில் இத்தாலி மக்களுக்கு நன்றி தெரிவித்து நடப்பு ஒலிம்பிக் விளையாட்டு போட்டி வெற்றி பெற வாழ்த்தினார்.

பின அரங்கிலுள்ள 60 ஆயிரத்துக்கு மேலான பார்வையாளர்கள் ஆரவாரம் எழுப்பினர். இத்தாலி அரசு தலைவர் சியாம்பி 20வது குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டி துவங்குவதகாக அறிவித்தார்.

இந்த ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் 9 வகை விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். 85 தங்க பதங்கங்கள் வழங்கப்படும். சீன அணியில் 151 விளையாட்டு வீரர்கள் உள்ளனர். குறுகிய பாதை பனி சறுக்கல் போட்டி, விரைவு பனி சறுக்கல் போட்டி, உருவப் பனி சறுக்கல் போட்டி, சுயேச்சை பனி சறுக்கல் போட்டி போன்ற போட்டிகளில் தங்க பதக்கம் வெல்வதற்கு சீன விளையாட்டு வீரர்கள் முயற்சிப்பார்கள்.