யாங் சு ஆற்று மூன்று மலை பள்ளத்தாக்கு திட்டம், 2003ம் ஆண்டில் நீர் சேமிப்பு, நதி நீர் போக்குவரத்து, மின் உற்பத்தி ஆகிய மூன்று குறிக்கோள்களை நிறைவேற்றியது முதல், பலவகைகளிலும் பயனளித்து வருவதாக மூன்று மலை பள்ளத்தாக்கு திட்டப்பணியின் கட்டுமான கமிட்டி துணை தலைவர் Pu Haiqing கூறியுள்ளார். நேற்று Chong Qing நகரில் பேசிய அவர், 2004ம் ஆண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது, மூன்று மலை திட்டப்பணி, யாங் சு ஆற்றின் நடு மற்றும் கீழ் பகுதிகளில் நீரோட்டத்தின் நெருக்குதலைக் குறைத்தது என்றார். மேலும், பத்தாயிரம் கோடி கிலோவாட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதனால், சில பிரதேசங்களில் மின் பற்றாக்குறை பெரிதும் குறைந்து விட்டது. நீர்வழிப் போக்குவரத்து வசதிகளும் பெரிதும் மேம்பட்டுள்ளன. தவிரவும், அங்குள்ளவர்களை குடியமர்த்தும் பணியும் தங்குதடையின்றி நடைபெறுகின்றது. உயிரின வாழ்க்கைச் சூழல் பாதுகாப்பும் மேம்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.
|