சீனாவில் திறமையாளர்களுக்கான பயிற்சி
cri
தொழிலாளர்களின் கல்வியறிவை உயர்த்தும் வகையில், உயர் தொழில் நுட்ப திறமையாளர்களுக்கான பயிற்சியை சீனா அதிகரிக்கும் என்று சீன தொழிலாளர் நலன் மற்றும் சமூக காப்புறுதி அமைச்சகத்திலிருந்து எமது செய்தியாளர் கூறுகிறார்.
அடுத்த 5 ஆண்டுகளில் புதிதாக நாடு முழுவதிலும் 19 லட்சம் தொழில் நுட்ப மற்றும் உயர் நிலை வல்லுநர்களுக்கும், 70 லட்சம் உயர் நிலை தொழில் நுட்ப தொழிலாளர்களுக்கும் பயிற்சி தரப்படும். அத்துடன், இடைநிலை மற்றும் துவக்க நிலை தொழில் நுட்ப உழைப்பாளர்களின் கல்வியறிவை உயர்த்தச் சீனா பாடுபடும் என்று இவ்வமைச்சகத்தின் தொடர்புடைய பொறுப்பாளர் தெரிவித்தார்.
தொழில்முறை கல்லூரிகள்-பல்கலைக்கழகங்களின் அடிப்படை பயிற்சி வழங்கும் பங்கை சீனா வெளிக்கொணர்ந்து, கல்லூரிகள்-தொழில் நிறுவனங்களுக்கிடையே ஒத்துழைப்பு பயிற்சி முறையை அமைக்கவுள்ளது. வசதியான நகரங்களில், நவீன உற்பத்தி மற்றும் அறிவியல் தொழில் நுட்ப தரத்துடன் ஒன்றிணையும் நடைமுறை பயிற்சி தளங்கள் அமைக்கப்படும் என்று தெரிகின்றது.
|
|