• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-02-14 17:01:02    
மாதவிலக்கு... தயங்காம பேசுவோம்

cri

தீட்டு, வீட்டுக்கு தூரம், வீட்டு விலக்கு, மாதவிலக்கு, மாதவிடாய் பெண் உடலின் இயற்கை நிகழ்வான உதிரப் போக்குக்குத் தான் எத்தனை பெயர்கள். அதை வைத்துத் தான் எத்தனை (மூட) நம்பிக்கைகள், பயங்கள்.

மாதவிலக்கு சமயத்தில் பெண்கள் வெளியில் சென்றால் விபத்து நடக்கும். குளித்தால் சளி பிடிக்கும். காயம் படும். கனமான பொருட்களை தூக்கக் கூடாது. பூக்களைத் தொட்டால் வாடிவிடும். வயல் வெளியே சென்றால் பயிர் கருகிவிடும். தனி தட்டில் தான் சாப்பிட வேண்டும். தலைக்கு குளிக்காமல் வீட்டுக்குள் நுமையக் கூடாது. சாப்பிட்ட மிச்சத்தை நாய்க்கு போட்டால் வயிறு வலிக்கும். இப்படி பல கூடாதுகள்.

கிராமப்புறத்தில் சடங்கான பெண்ணை தனிக் குடிசையில் ஒதுக்கி வைக்க வேண்டும்.

1  2  3  4