கலை.....வணக்கம் நேயர்களே. இப்போது சீன உணவு அரங்கம் நிகழ்ச்சி நேரம். ராஜாராம், கலையரசி இருவரும் இந்த நிகழ்ச்சியில் பூசணிக் காய் லஸ்கா பற்றி கூறுகின்றார்கள்.
ராஜா....மார்கழி மாதம் மச்சும் குளிரும் தைமாதம் தரையும் குளிரும் என்பார்கள்.
கலை..... குளிருக்கு கதகதப்பாக ஏதேனும் உணவு வகை இருக்குதா?
ராஜா.....ஆமா. பூசணி லஸ்கா. குளிர்காலத்தில் இதை ராத்திரியில் சாப்பிட்டுப் படுத்தா சும்மா ஜம்முனு தூக்கம் வரும்.
கலை...அப்படியா?இதை சமைப்பதற்கு என்னென்ன பொருட்கள் வேண்டும்?
ராஜா....பூசணிக்காய்-250 கிராம். குடைமிளகாய்-5. வெள்ளைப் பூண்டு-4 பத்தை உங்களுடைய பெருவிரல் அளவுக்கு இஞ்சி. கொத்தமல்லி தழை தண்டோடு கொஞ்சம் சமையல் எண்ணெய் கோழிக்கறி அல்லது காய்கறி சூப் இதுல பீன்ஸ் கேரட், கோஸ் போல ஏதாவது காய் சேர்க்கலாம் தேங்காய்ப்பால்-400 மிலி செர்ரி தக்களி- 24. செர்ரி தக்காளி என்பது செர்ரி பழம் போல சின்னதாக இருக்கும். இங்கே சீனாவில் கிடைக்கின்றது. தமிழ் நாட்டில் கிடைக்காட்டி இருக்கிறதுலே சின்னதா 10 தக்களி வாங்கிக் கோங்க. எலுமிச்சம் பழச்சாறு-புதினா இலை.
கலை....ராஜா, பட்டியல் நீளமா இருக்கு. நம்ம நேயர்களால் நினைவு வைக்க முடியுமா?நான் திரும்பிச் சொல்றேன்.
ராஜா....சொல்லுங்க.
கலை... பூசணிக்காய்-250 கிராம். குடைமிளகாய்-5. வெள்ளைப் பூண்டு-4 பத்தை உங்களுடைய பெருவிரல் அளவுக்கு இஞ்சி. கொத்தமல்லி தழை தண்டோடு கொஞ்சம் சமையல் எண்ணெய் கோழிக்கறி அல்லது காய்கறி சூப் இதுல பீன்ஸ் கேரட், கோஸ் போல ஏதாவது காய் சேர்க்கலாம் தேங்காய்ப்பால்-400 மிலி செர்ரி தக்களி- 24. செர்ரி தக்காளி என்பது செர்ரி பழம் போல சின்னதாக இருக்கும். இங்கே சீனாவில் கிடைக்கின்றது. தமிழ் நாட்டில் கிடைக்காட்டி இருக்கிறதுலே சின்னதா 10 தக்களி வாங்கிக் கோங்க. எலுமிச்சம் பழச்சாறு-புதினா இலை.
சரி, இனி இதோட செய்முறை பக்குவம் சொல்லுங்க. ஆமா, சமையல் கலைஞர்கள் அணிகிற உயரமான தொப்பி மாட்டிக் கோங்க.
ராஜா....இதை எதுக்குப் போடறாங்க செரியுமா. சமைக்கும் போது தலை முடி உணவுல விழுந்திரக் கூடாது. அதனால சகோதரிகளே. நீங்கள் கூந்தலை வாரி முடிந்து கட்டிக் கொள்ளுங்கள். சகோதர்களே நீங்கள் அடுப்படிக்குப் போனா தலைப்பா கட்டிக் கோங்க சரி. செய்முறை சொல்லட்டுமா?
கலை....சொல்லுங்க.
ராஜா.....முதலில் பூசணிக்காயை விதை நீக்கிவிட்டு பெரியபெரிய துண்டுகளாக நறுக்கி நீராவியில் வேக வைக்கணும். 15 நிமிடம் வெந்தால் பூசணிக்காய் மிருது வாகிவிடும்.
கலை....சரி, அப்புறம்.
ராஜா....மசாலா அரைக்கணும். இதுக்கு குடை மிளகாயை விதை எடுத்து விட்டு நறுக்கிக் கொள்ளணும். பிறகு வெள்ளைப் பூண்டு, இஞ்சி இரண்டையும் சிறுசிறு துண்டுகளாக நறுக்கணும். இதை ஒரு மிச்சியில போடுங்க. அப்புறம் கொத்தமல்லி தண்டு மட்டும் பொடிசா நறுக்கி அது கூடப் போட்டுக் கோங்க கொஞ்சம் கொத்தமல்லி இலைகளையும் போடலாம். கொஞ்சம் எண்ணெய் விட்டு இந்தக் கலவை எல்லாத்தையும் விழுது போல அரைத்துக் கொள்ளணும்.
கலை....சரி. இனி சமைக்கணுமா?
ராஜா....ஆமா. அதுக்கு அடுப்பை மிதமா எரியவிட்டு வாணலியை வச்சி மசாலாவை போட்டு வதக்குங்க. அடிப்படைக்காம வாணலியில சுருளச்சுருள வதக்கணும். ஒரு நிமிடம் அல்லது ரெண்டு நிமிடம் வதக்கிய பிறகு, அதிலே கோழிக்கறி அல்லது காய்கறி சூப் விட்டு தேங்காய்ப் பால் ஊற்றி கொதிக்க விடுங்கள்.
கலை.....இனி பூசணிக் காய் தக்காளி இருக்குது. இதை என்ன பண்ணுவது?
ராஜா.....தக்காளியை சிறுசிறு துண்டுகளா நறுக்கி அதில எலுமிச்சம் பழத்தை பிழிஞ்சி விடுங்க. 7 முதல் 10 நிமிடம் இது வதங்கட்டும் அப்புறம் பூசணிக்காய் துண்டுகளையும் சேர்த்து ஒரிரு நிமிடம் வேக விடணும். இனி, இதை ஒரு கோப்பையில் ஊற்றி புதினா இலைகளைத் தூவி சூப் போல குடிக்க வேண்டியது தான்.
|