• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-02-13 09:39:06    
தென்கொரியாவின் காதலர் தினம்

cri

பிப்ரவரி 14ம் நாள், காதலர் தினம். இதை முன்னிட்டு இளம் நேயர்களுக்கு விழா வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். முதலில், தென் கொரியாவில் காதலர் தினம் பற்றி பார்ப்போம்.

தென் கொரியாவில் காதலைக் கருப்பொருளாகக் கொண்ட தொலைக்காட்சி நாடகங்கள், நாவல்கள் எல்லாம் ஆசியாவில் பரவி வருகின்றன. இது தென் கொரியாவின் காதல் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்புடையது. திறமை மிக்க தென் கொரிய வணிகர்களோ இந்நிலைமையைப் பயன்படுத்தி ஆண்டு முழுவதும் 21 காதலர் தினங்களை நிர்ணயித்துள்ளனர்.

இவற்றில் பிப்ரவரி 14ம் நாள் காதலர் விழா முதலிடம் பெற்றது. அதன் பின்னர் திங்கள்தோறும் 14ம் நாள் காதலர் விழா என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருந்தாலும் ஒவ்வொரு நாளுக்கும் வெவ்வேறான பொருட்கள் உண்டு. எடுத்துக்காட்டாக, ஜனவரி 14ம் நாளானது, நாள் குறிப்பு நாளாகும். காதலர்கள் தங்கள் அன்பைச் செலுத்தும் பொருட்டு, எதிர் தரப்பிடம் அன்பளிப்புப்பொருட்களை வழங்க வேண்டும்.

மார்ச் 14ம் நாள் வெள்ளை நிற விழாவாகும். இது, ஜப்பானின் காதலர் விழாவுடன் தொடர்புடையது. ஏப்ரல் 14ம் நாளானது, கறுப்பு நிற நாளாகும். இது, தென் கொரியாவின் கிராமப்புற விழாவாகும். அன்று துணையில்லாதவர் கறுப்பு நிற உணவுப் பொருட்களைச் சாப்பிட வேண்டும். மே 14ம் நாளன்று, மஞ்சள் நிறம் மற்றும் ரோஜா மலர் நாளாகும். அன்று, தனியாக அலைந்து திரியும் நபர்கள், ஒன்று கூடி கறி பொருட்களை வயிறார உண்ண வேண்டும். அத்துடன் மஞ்சள் நிற சட்டைகளைப் போட்டு விழாவைக் கொண்டாட வேண்டும். தவிர, இப்போது காதலர்கள் சந்திப்புகளின் 100வது, 200வது, 300வது, 1000வது நிறைவு நாள் கொண்டாட்டங்கள் தென் கொரியாவில் பரவலாக நடைபெறுகின்றன. ஒட்டுமொத்தமாக தென் கொரியாவில் 21 காதலர் தினங்கள் கொண்டாடப் பெறுகின்றன. விழாக்களின் போதெல்லாம் காதலர்கள் ரோமான்டிக் சந்திப்புகளை ஏற்பாடு செய்து, கூட்டாகக் கொண்டாடி மகிழ்வார்கள்.