• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-02-13 10:46:20    
சீனாவின் பொருளாதார பிரமுகர்கள்

cri

அண்மையில், 2005ம் ஆண்டின் பத்து சீனப்பொருளாதாரப் பிரமுகர்கள் தேர்தெடுக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் தொழில் நிறவனங்களை நடத்துகிறவர்கள். தங்களது தொழில் நிறுவனங்களின் அலுவல் சாதனை, சீனப்பொருளாதாரத்திற்கும் சமூகத்திற்கும் அவர்கள் ஆற்றிய பங்கு என்ற அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டனர்.

கடந்த 20 ஆண்டுகளில், சீனாவின் பொருளாதாரம், மாபெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. 9 விழுக்காட்டுக்கும் கூடுதலான மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன், சீனப் பொருளாதாரம், 2004ம் ஆண்டில் உலகில் 6வது இடம்பெற்றது. வேகமான வளர்ச்சிக்கு ஏற்ப, சீனாவின் தொழில் நிறுவனங்களில், தற்சார்புத்திறன் இல்லை. உற்பத்தி பொருளின் மதிப்பு குறைவு முதலிய பிரச்சினைகள் படிப்படியாக ஏற்பட்டன. சீன பொருளாதாரத்தின் தொடர்ச்சியான வளர்ச்சியை நிலைநிறுத்தும் பொருட்டு, உள்நாட்டு தொழில்நுட்பத்துடன், பொருட்களை உற்பத்தி செய்யுமாறு, மேலும் அதிகமானோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த நிலைமையில், ஜூங் சிங் வேய் மின்னணு தொழில் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி தாங் ஜுங் ஹான், தமது தொழில் நிறுவனத்திற்கு தலைமை தாங்கி, டிஜிடல் சில்லி உற்பத்தியை வளர்த்து, 6 ஆண்டுகளில் உலக கணிணி பாட சில்லு சந்தையில் 60 விழுக்காடு இடம்பெற்றதால், 2005ம் ஆண்டின் சீனப்பொருளாதாரப் பிரமுகர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பரிசு வழங்கல் விழாவில் பேசிய அவர், புதுப்பிப்பை திறவு கோலாக கொள்வது, எதிர்காலத்தில் சீனப்பொருளாதார வளர்ச்சிப் போக்காக மாறும் என்றார். அவர் மேலும் கூறியதாவது:

தற்சார்பை நாடுவோரின் சார்பில் நான் இந்தப் பரிசைப் பெற்றேன். இது, ஒரு அடையாளமாகும். சந்தைக்கு வழிக்காட்டியாகவும், உள்நாட்டுத் தொழில் நட்பத்தை, மையமாகவும் கொண்ட தற்சார்புப் பொருளாதாரத்தை நாங்கள் நிறுவியதை இது, பிரதிபலித்துள்ளது என்றார் அவர்.

தாங் ஜுங் ஹானும் அவரது தொழில் நிறுவனமும், சீனப்பொருளாதார வளர்ச்சியின் சீர்திருத்தப் பிரதிநிதிகளாக கருதப்பட்டனர். சீன பெட்ரோலிய நிறுவனத்தின் தலைமை மேலாளர் புஃ சாங் யூ தேர்ந்தெடுக்கப்பட்டது, சீனாவின் தொழில் நிறுவனங்கள் வெளிநாடுகளில் வளர்ச்சியடைவதற்கு, மேலும் அதிகமான சீன மக்கள் ஆதரிப்பதைக் காட்டுகிறது.

கடந்த ஆண்டில், இந்தத் தொழில் நிறுவனம், அமெரிக்காவில் 9வது பெரிய பெட்ரொலிய நிறுவனம்—யூனிகோவிடம், 1850 கோடி அமெரிக்க டாலர் விலைக்கு வாங்கும் திட்டத்தை முன்வைத்தது. இந்தத் திட்டம், அமெரிக்காவின் உள்நாட்டு அரசியல் கட்டாயத்தினால் தோல்வியடைந்த போதிலும், சீன கடல் பெட்ரோலிய நிறுவனத்திற்கும் ஏன் சீன தொழில் நிறுவனத்துறை முழுவதிற்கும் கூட நலனை பெற்றுள்ளன. இது குறித்து, புஃ சாங் யூ கூறியதாவது:

நாங்கள் தோல்வியடைய வில்லை என எமது பங்கு உரிமையாளர் கருதியது. சர்வதேச மூலதனச் சந்தையில் சர்வதேச வழக்கத்தின் படி எதிரிகளைப் போர் இட்டு, வெற்றி பெற விடாமல் இருந்தால், எங்களுடைய முயற்சியுடன் ஒரு பழுத்த தொழில் நிறுவனமாக கருதப்பட்டுள்ளோம் என்றார் அவர்.

கடந்த ஆண்டில் 1000 கோடி யுவான் விற்று முதல் கண்ட யீ லீ குழுமத்தின் ஆளுனர் பெஃன் காங், கடந்த ஆண்டில் 10 கோடி யுவான் நிதியைத் திரட்டி, தொழில் நிறுவனத்தில் சீனாவின் முதலாவது அறகொடை நிதியத்தை நிறுவிய சீன யுவான் யியாங் போக்குவரத்து குழுமத்தின் ஆளுனர் வேய்சியாபுஃ, சீனாவில் முதலாவது தற்சார்பு உடைய உயர்வேக கனரக மின் இயந்திரத்தை வடிவமைக்கும் வேய்ச்சே ஆற்றல் நிறுவனத்தின் ஆளுனர் தேன் சூ குவாங் முதலியோர், 2005ம் ஆண்டின் சீனப்பொருளாதார பிரமுகர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுசார் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளாவர்ர்.