• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-02-16 13:27:49    
சீனாவில் வசந்த விழா பழக்க வழக்கங்கள்

cri

சீன மக்களின் பாரம்பரிய விழாவான வசந்த விழா வர இருக்கின்றது. இவ்வாண்டு ஜனவரி 29ந் நாள் வசந்த விழா. சீன மக்களைப் பொறுத்தவரை, முழு ஆண்டிலும் மிகவும் கோலாகலமான உற்சாகமான பாரம்பரிய விழா வசந்த விழாவாகும். இவ்விழா, மேலை நாட்டு மக்களின் கிறிஸ்துமஸ் விழாவைப் போன்றது. வசந்த விழாவுக்கு முன்னரும் பின்னரும் சீனாவுக்கு வருகை தந்து சுற்றுலா மேற்கொள்வது, சீன மக்களின் பழக்க வழக்கங்களை அறிந்துகொள்வதற்குச் சிறந்த வாய்ப்பாகும். முதலில் வசந்த விழாவின் போது பெய்ச்சிங்கில் கோயில் விழா பற்றி அறிமுகப்படுத்துகிறோம். வசந்த விழாவின் போது, கோயில் விழாவில் கலந்துகொள்வது பெய்ச்சிங் மக்களின் பாரம்பரிய பழக்க வழக்கமாகும். கோயில் விழா, பெய்ச்சிங்கில் சில நூறு ஆண்டு வரலாறுடையது.

கோயில் விழாவின் போது ஆட்கள் நெரிசலாக உள்ளது. சிங்க மற்றும் டிராகன் நடனம், பொய்க்கால்களின் மேல் நடந்துசெல்வது உள்ளிட்ட தனிச்சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்கலாம். சுவையான பெய்ச்சிங் சிற்றுண்டியை உண்ணலாம். பட்டம், காகிதக் கத்தரிப்பு, களிமண் உருவப் பொருள், சிறியக் காற்றாடி வாகனப் பொருள் உள்ளிட்ட கிராமப்புறக் கலைப்பொருட்களை வாங்கலாம். கோயில் விழாவின் போது, மக்கள் பல வண்ணங்கள் உள்ள சிறிய காற்றாடி வாகனப் பொருளைக் கையில் ஏந்திய வண்ணம் மகிழ்ச்சியுடன் போய்வருவது, ஆனந்த நடனம், மேளம் தட்டுதல் ஆகியவற்றினால், தொன்மைவாய்ந்த கோயில்களும் தௌ மதக் கோயில்களும் பூங்காக்களும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியிருக்கும். சடங்குகள் மிகுந்த இந்தக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள வெளிநாட்டுப் பயணிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படும். இது பற்றி சீனச் சர்வதேச சுற்றுலா நிறுவனத்தின் மேலாளர் சாங் சுவொ கூறியதாவது, வசந்த விழா நாட்களில் வெளிநாட்டுப் பயணிகளை வரவேற்கும் எங்கள் நிறுவனம், பெய்ச்சிங்கிலுள்ள தனிச்சிறப்புடைய சில காட்சித் தளங்களில் சுற்றுலா செய்வதற்கு ஏற்பாடு செய்கிறது என்றார்.

தற்போது பெய்ச்சிங்கிலுள்ள பல்வேறு கோயில்களில் கோயில் விழாவுக்கான ஆயத்தப்பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன என்று வசந்த விழாவுக்கான பெய்ச்சிங் கோயில் விழா அமைப்புக் கமிட்டிப் பொறுப்பாளர் லீ வெய்ஹுவா கூறினார். பாரம்பரிய பெய்ச்சிங் கோயில் விழா, வெளிநாட்டுப் பயணிகளை ஈர்க்கும் என்று அவர் கருத்து தெரிவித்தார். சீனாவின் பாரம்பரிய விழா சூழ்நிலையை நேரடியாக உணரும் வகையில், சில ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா மற்றும் கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் கோயில் விழாவில் கலந்துகொள்வர் என்றார். இனி, சீனாவின் முதலாவது பெரிய ஆறான யாங்சி ஆற்றின் கீழ் பகுதியில் அமைந்துள்ள நான்ஜிங் நகரில் விளக்கு விழா பற்றி கூறுகின்றோம். வரலாற்றில்

நான்ஜிங் நகரம், புகழ் பெற்ற 10 பேரரசர்களின் தலைநகராகத் திகழ்ந்தது. சிங்ஹுவெய் ஆறு இந்நகருக்கு ஊடாகச் செல்கின்றது. இவ்வாற்றின் பக்கத்தில் கட்டப்பட்ட கம்பியூசியஸ் கோயில், சீனச் சந்திரன் நாட்காட்டியின் படி ஆண்டுதோறும், ஜனவரி முதல் நாள் முதல் 18ந் நாள் வரை, கம்பியூசியஸ் கோயில் விளக்கு விழா நடைபெறுவது வழக்கம். விளக்கு விழா, கிழக்கு சீனாவில் பிரபல கோயில் விழாவாக மாறியுள்ளது. நான்ஜிங் நகரிலுள்ள கம்பியூசியஸ் கோயில் சுமார் 900 ஆண்டு வரலாறுடையது. சீனச் சந்திரன் நாட்காட்டியின் படி ஆண்டுதோறும் ஜனவரி திங்கள் 15ந் நாளுக்கு முன்னரும் பின்னரும் கம்பியூசியஸ் கோயிலுக்கும் சிங்ஹுவெய் ஆற்றுப் பகுதிக்கும் வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டுகிறது. இவ்வாண்டு கம்பியூசியஸ் கோயில் விளக்கு விழா பற்றி எமது செய்தியாளர் யாங் மிங் கூறியதாவது, இவ்வாண்டு வசந்த விழா நாட்களில் நாங்ஜிங்கிலுள்ள கம்பியூசியஸ் கோயில் விழாவின் போது, 4லட்சத்து 50 ஆயிரம் வண்ண விளக்குகள் தொங்கவிடப்படும். இது, வரலாற்றில் மிக அதிகமாகும். தேசிய இனப் பழக்க வழக்கங்களைக் கொண்ட விளக்கு விழா, சிங்ஹுவெய் விளக்கு உலகில் முதலாவது அழகான காட்சியாக மீண்டும் தோன்றும் என்றார்.