கடந்த ஜனவரி திங்களில், சீனாவின் மொத்த ஏற்றுமதி மதிப்பு, சுமார் 12 ஆயிரத்து 50 கோடி அமெரிக்க டாலராக இருந்தது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 26.8 விழுக்காடு அதிகம் என்று சீனச் சுங்கத் துறை இன்று வெளியிட்ட புள்ளி விபரம் காட்டுகின்றது. சீனா ஏற்றுமதி செய்யும் பொருட்களில், புதிய உயர் தொழில் நுட்பப் பொருட்களின் பங்கு அதிகம். இது கடந்த ஜனவரி திங்களில், 3400 கோடி அமெரிக்க டாலரைத் தாண்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 30 விழுக்காட்டுக்கு மேல் அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி திங்களில், சீனாவுக்கும் முக்கிய வர்த்தக கூட்டாளிகளுக்குமிடையே ஏற்றுமதி இறக்குமதி ஒரே சீராக அதிகரித்து வந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து சீனாவின் மிக பெரிய வர்த்தக கூட்டாளியாகத் திகழ்கிறது. அமெரிக்கா சீனாவின் இரண்டாவது வர்த்தக கூட்டாளியாகவும், ஜப்பான் மூன்றாவது வர்த்தக கூட்டாளியாகவும் திகழ்கின்றன. ஆசியான், சீனாவின் நான்காவது வர்த்தக கூட்டாளியாக மாறியுள்ளது.
|