• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-02-15 16:07:15    
கருத்து கடிதங்கள்

cri
திருச்சி மாவட்டம் மணக்கால் நேயர் ரா அன்பழகம் அக்டோபர் நவம்பர் திங்கள் நிகழ்ச்சிகள் பற்றி பற்பல கடிதங்களை எழுதிகருத்துக்களைத் தெரிவித்துள்ளார். கருத்தும்பாளையம் என் பசுபதிராஜ் ஜூலை, ஆகஸ்ட் நிகழ்ச்சிகள் பற்றி எழுதிய கடிதம், சீனப் பாடல்களை சிறப்பாகவும், அழகாகவும் வழங்கும் மீனாவைப் பாராட்டியுள்ளார். முனுகப்பட்டு கண்ணன் சேகர் செப்டம்பர் 7 செய்திகல் பற்றி கடிதம் எழுதிவிட்டு, கடந்த ஒரிரண்டு ஆண்டுகளாக சீன வானொலி தமிழ் ஒலிபரப்பின் செயல்பாடு சரியாக இல்லை. தொலைபேசியில் தொடர்பு கொண்டால் தெரிவிக்கிறேன் என்கிறார். நேயர்களின் பாராட்டுக்கு நன்றி. நண்பர் கண்ணன் சேகர் தமது கவணத்தில் படும் குறைகளை வெளிப்படையாகவே சுட்டிக் காட்டலாம், வரவேற்கிறோம், சரி ராஜா மின்னஞ்சல்கள் வளவனூர் நேயர்கள் சார்பாக பேக்ஸ் மூலம் கிறிஸ்துமஸ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள என் உமாசங்கர், உமா காயத்ரி வ உ கல்பனா முத்து சிவக்குமார், இளங்கோவன் சிவக்குமார், கண்ணன் ஆகியோர் நான்காவது ஒலிப்பரப்பு தெளிவாக இருப்பதாகவும், தொடர்ந்து கேட்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். பாண்டிச் சேரி என் பாலக்குமார் சீனக்கதைக்கு தமிழ்ப் பெயர் வைப்பது தொடர்பான விளக்கம் தமக்கு உடன்பாடு இல்லை என்கிறார். முடிந்தால் சிறிய பெயர்களாக பயன்படுத்துங்கள். நேயர்களின் வாழ்த்துக்கு நன்றி. சீனக் கதைகளை மொழியாக்கம் செய்யும் போது, பெயர்களை மாற்றுவது சரியல்ல என்று கருத்துகிறோம். வளவனூர் புதுபாளையம் செல்வம் இவ்வாண்டின் பணி கடுமையாக இருக்கிறது. ஆனால் நான் மனத்தில் மகிழ்ச்சி உணர்வு நிறைவு இருக்கிறது. குறிப்பாக நேயர் நேரம் நிகழ்ச்சி பல நேயர்களுக்கு பிடிப்பதால் நான் மிக மகிழ்ச்சியடைந்தேன். இந்நிகழ்ச்சியில் பெரும்பாளான பணி திரு ராஜாரம் புருந்தது. நான் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். அடுத்த ஆண்டில் நீங்கள் மேலும் நல்ல ஒத்துழைப்பு செய்வதை எதிர்பார்க்கிறேன். வளவனூர் செல்வம், கருத்தரங்கு வெற்றிபெற்றதற்கு சீனத் தமிழர்கள் சார்பாக நன்றி தெரிவிக்கிறோம் என்று விஜயலட்சுமி கூறியது என் மனதை நெகிழவைத்தது என்கிறார். நேருக்கு நேர் நிகழ்ச்சியில் சீனாவுக்கு அப்பால் என்ற தலைப்பு பற்றி க செந்தில் எழுப்பிய கந்தேசம் நியாயமானது தான். ஆனால் தற்போது இந்த நிகழ்ச்சி மேம்பட்டு வருகிறது. மேலும் லுஷூன் அவர்களின் பழைய வீடு சிறு கதை எளிமையான, நீரோட்டம் போன்ற நடையில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதாக எழுதியுள்ளார். லுஷூன் கதைகளை அதிகம் எதிர்பார்ப்பதாக கூறுகிறார். மலர்ச் சோலை நிகழ்ச்சியில் சீனாவைப் பற்றிய தகவல்களும் இடம்பெற வேண்டும் என்கிறார். லுஷூன் கதைகள் பல மொழிபெயர்க் கப்பட்டுள்ளன. அப்பப்போது ஒலிபரப்பாகும். நேயரின் குருத்துக்களுக்கு நன்றி. டிசம்பர் 12 அன்று கடல்கொந்தளிப்புக்கு பிந்தைய தமிழ்நாடு என்ற செய்த்த தொகுப்பை தயாரித்த சீன வானொலி செய்தியாளர்களின் முயற்சியைப் பாராட்டியுள்ளார். நிவாரணப் பணிகளில் நாகை மாவட்ட ஆட்சியர் ராதா கிருஷ்ணனின் பங்களிப்பைக் குறிப்பிட்ட இவர், எந்தாவளி நாட்டின் உதவியை எதிர்பாராமல் இந்தியா செய்த நிவாரணப் பணிகள் பற்றி சீன வானொலி சிறப்பாக கட்டுரை ஒலிபரப்பியதற்கு நன்றி என்கிறார். சீனாவிற்கு அப்பால் நிகழ்ச்சியில் ஆசியாவின் நூற்றாண்டு என்ற கட்டுரையில், சீனாவும் இந்தியாவும் நெருங்கிக் கைகோர்த்தால் 2020இல் உலகவரலாறு தலை கீழாக மாறும் என்று கூறப்பட்டது. சரியான கருத்து என்கிறார் செல்வம். அனைத்தோட்டம் ஏ பி கத்தசாமி, கிறிஸ்தமஸ், புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். பேளுக்குறிச்சி க செந்தில் கிறிஸ்தூமஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்துவிட்டு, இணையத்தில் சீனப் பெயர்கள் ஆங்கிலத்தில் வருகின்றன. தமிழிலேயே வெளியிடுங்கள் என்கிறார். கோயப்புத்தூர் கே தியாகராஜனும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். நேயர்களின் வாழ்த்துக்களுக்கும், கருத்துக்களும் நன்றி.