திபெத் தன்னாட்சிப்பிரதேசத்தில் சுற்றுலாத்துறையை விரைவாக வளர்க்கும் வகையில், பல்வேறு சுற்றுலா காட்சித் தலங்களை இணைக்கும் சுற்றுலா வட்டச்சாலை போடப்படும். மத்திய திபெத்தின் பள்ளத்தாக்கு பிரதேசத்துக்கும் தென் கிழக்கு திபெத்தின் மலை மற்றும் பள்ளத்தாக்கு பிரதேசத்துக்குமிடையே இந்நெடுஞ்சாலை கட்டப்படும், லாசாவை மையமாகக் கொண்ட மத்திய திபெத் பிரதேசம், திபெத்தில், பொருளாதாரம், அறிவியல் தொழில் நுட்பம், பண்பாடு ஆகியவை மிகவும் வளர்ச்சியடைந்துள்ள பிரதேசமாகும். தென் கிழக்கு திபெத்தில், உயரமான மலைகளும் பள்ளத்தாக்கும் இருப்பதால், புவியமைப்பு சிக்கல் வாய்ந்ததாக உள்ளது. காலநிலையும் மாறுபடுகிறது. இயற்கை வளம் அதிகம். பல காட்சித்தலங்களும் தனித்தன்மை வாய்ந்த தேசிய இன நடையுடை பாவனைகளும் காணப்படுகின்றன. கடந்த ஆண்டு, திபெத், 18 லட்சம் உள்நாட்டு வெளிநாட்டு பயணிகளை வரவேற்றது. சுற்றுலா மூலம் 193 கோடி யுவான் ஈட்டியது. சுற்றுலாவை மையமாகக் கொண்ட தொழில், திபெத் பொருளாதார வளர்ச்சியில் புதிய துறையாகியுள்ளது.
|