• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-02-17 08:57:25    
பதக்கங்களைப் பெற்ற சீன வீரர்கள்

cri

டூரின் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் இரட்டையர் இசை நடன பனிச்சறுக்கலின் இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை சாங் தான், வீரர் சாங் ஹௌ ஜோடி வெள்ளிப் பதக்கம் பெற்றது. குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் சீன வீரர்கள் இந்த நிகழ்ச்சியில் பெற்ற மிக சிறந்த சாதனை இதுவாகும். மற்றொரு சீன ஜோடி சென் சியே, சௌ ஹொங் போ வெண்கல பதக்கத்தையும், சீனாவின் வீராங்கனை பாங் ச்சிங், வீரர் தொங் ஜியன் நான்காம் இடத்தையும் பெற்றனர். ரஷியாவின் வீராங்கனை TOTMIANINA, வீரர் MARININ ஜோடி இந்த நிகழ்ச்சியின் தங்கப் பதக்கத்தை வென்றது.

2006ஆம் ஆண்டு சீன-ஆசியான் சர்வதேச கார் ஓட்டப் போட்டி இவ்வாண்டு அக்டோபர் முதல் நாள் முதல் 18ஆம் நாள் வரை நடைபெறும். திட்டப்படி, போட்டியில் கலந்துகொள்ளும் கார்கள் அக்டோபர் முதல் நாளன்று சீனாவின் குவாங் சி சுவான் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகரான நான்னிங் நகரிலிருந்து புறப்படும். கார் அணி நட்பு நுழைவாயில் மூலம் சீன எல்லையைக் கடந்து, வியட்நாம், தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், கம்போடியா உள்ளிட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்கள் வழியாக செல்லும். 18ஆம் நாள் நான்னிங் நகருக்கு திரும்பும். அப்போது சீனா உள்ளிட்ட 15 அணிகள் இப்போட்டியில் கலந்துகொள்ளும்.

பிப்ரவரி 4ஆம் நாள் ஜெர்மனியின் ARNSTADT நகரில் நடைபெற்ற உள் அரங்க உயரம் தாண்டுதல் போட்டியில் சுவீடன் வீராங்கனை BERGQVIST 2.08 மீட்டர் என்ற உயரத்தைத் தாண்டி, இந்த நிகழ்ச்சியின் உலக சாதனையை முறியடித்தார். முன்பு இந்த நிகழ்ச்சியின் உலக சாதனை 2.07 மீட்டராக இருந்தது. கால்பந்து சரிப்படுத்தல் மூலம், உலக கோப்பைக்கான கால்பந்து போட்டிக்கான அனுமதிச் சீட்டுக்களின் எண்ணிக்கை ஓரளவு அதிகரித்து, 30 லட்சத்து 70 ஆயிரத்தை எட்டியுள்ளது.

இது, முதலில் மதிப்பிட்ட எண்ணிக்கையைவிட ஒரு லட்சத்து 40 ஆயிரம் அதிகமாகும். இருப்பினும் இது தேவையை இன்னும் நிறைவேற்ற முடியாது. தற்போது பல்வேறு நாடுகளின் கால்பந்து விரும்புவோர் வாங்க உள்ள சீட்டுகளின் எண்ணிக்கை இதைவிட 20 மடங்கு அதிகமாகும் என்று தெரிகின்றது. இத்துடன் இன்றைய விளையாட்டுச் செய்திகள் நிறைவடைகின்றன.