• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-02-17 22:49:42    
சால இனம்

cri

சீனாவில், சால இனம், ஒரு லட்சத்துக்குட் பட்ட மக்கள் தொகையுடைய சிறுபான்மை தேசிய இனமாகும். இவ்வினத்தவர்கள் முக்கியமாக வடமேற்கு சீனாவின் சிங் ஹா மாநிலத்தில் குழுமி வாழ்கின்றனர். முன்பு, அவர்கள் மத்திய ஆசியாவில் வாழ்ந்தனர். பின்னர், அங்கிருந்து சிங் ஹா மாநிலத்துக்கு வந்து குடியேறியுள்ளனர். நாடோடி வாழ்க்கை இவ்வினத்தவர்களின் தனித்தன்மையாகும். எனவே, சீனாவின் சில மாநிலங்களில் அவர்களின் காலடிச்சுவடுகள் காணப்படலாம். தலைநகரான பெய்சிங்கில் மட்டும் மூவாயிரத்துக்கும் அதிகமான சால இன மக்கள் வாழ்கின்றனர்.

பெய்சிங் மாநகரின் கிழக்குப்பகுதியில், "சால இனத்தவர் வீடு" எனும் உணவு விடுதி அமைந்துள்ளது. இது பெரிய விடுதி அல்ல என்ற போதிலும் வருகை தருவோர் அதிகம். குறிப்பாக, இரவில் இருக்கை எதுவும் காலியாக இருப்பதில்லை. பலர் சாப்பிட வரிசையில் காத்திருக்கின்றனர். இவ்விடுதியை நடத்துவர் ஹேன் சென் பு, முழுக்க முழுக்க சால இனத்தவர். அவரது உணவு விடுதியில் தயாரான மாட்டு இறைச்சி, ஆட்டு இறைச்சி கறிகளும், கோதுமை மாவு உணவு வகைகளும் தனிச்சிறப்பியல்புடையவை. பலராலும் மிகவும் வரவேற்கப்படுபவை. பத்து ஆண்டுகளுக்கு முன்பே அவர் தம் ஊரான சிங் ஹா மாநிலத்திலிருந்து பெய்சிங் வந்தார். துவக்கத்தில், தமது உற்றார் உறவினரால் நடத்தப்பட்ட உணவு விடுதியில் பணி புரிந்தார். இவ்விடுதியில் சமையல் கலையைக்கற்று கொள்வது மிகவும் கடினமானது. அவர் முதல் முறையாக கத்தியைக் கொண்டு ஆட்டு இறைச்சியை வெட்டிய அனுபவம் இன்னமும் அவரது நினைவில் பசுமையாக இருக்கின்றது. அவர் கூறியதாவது:

"விடுதியின் உரிமையாளர் இரண்டு ஆடுகளை கொடுத்தார். மெல்லிய துண்டுகளாக அவற்றை வெட்டுமாறு சொன்னார். இது கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு உணவு தயாரிப்புக் கலையாகும். ஆகக்குறைந்தது, 6 மணிநேரத்தில் பணியை செய்து முடித்தேன். அப்போது கையில் ரத்தம் சிந்தியது. இது என்னால் மறக்க முடியாதது." என்றார்.