தனியார் தொழில் முனைவோர்கள், இந்தப் பட்டியலில் 50 விழுக்காடு இடம்பெற்றுள்ளனர். இவர்களில், சீனாவில் விவசாயத் தொழிலாளர்களுக்கான முதலாவது உதவி நிதியத்தை நிறுவிய தாலியான் வன்தா குழுமத்தின் ஆளுனர் வாங் சியான் லின், சீனாவில் புகழ்பெற்ற கார் தயாரிப்பு தொழில் நிறுவனமான ச்சி ரே தொழில் நிறுவனத்தின் தலைவர் யீன் தோங் யாவ் முதலியோரைக் குறிப்பிடலாம். இது குறித்து சீனத்தேசிய தொழில் மற்றும் வணிக சம்மேளனத்தின் தலைவர் ஹுவாங் மேங் புஃ பேசுகையில், தனியார் பொருளாதாரம், சீனப்பொருளாதாரத்தில் மேலும் பெரிய பங்கினை ஆற்றி வருவதை இந்த தொழில் முனைவோரின் வெற்றி காட்டுகிறது என்றார். அவர் மேலும் கூறியதாவது:
சீனாவின் தனியார் பொருளாதாரம், 75 விழுக்காட்டு வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளது. சீன சமூகப் பொருளாதார வளர்ச்சியில், தனியார் பொருளாதாரமும் தனியார் தொழில் முனைவோர்களும் மாபெரும் பங்காற்றியுள்ளனர் என்றார் அவர்.
பத்து பொருளாதார பிரமுகர்களை தவிர, சீனப் பொருளாதார மற்றும் சமூகத்தின் ஒருங்கிணைப்புக்குப் பாடுபடும் பிரமுகரைப் பாராட்டும் பொருட்டு, சமூக பொது நல பரிசு நிறுவப்பட்டுள்ளது. பெய்ஜிங் பூகோள கிராமம் என்ற சுற்று சூழல் பண்பாட்டு மையத்தை தொடங்கிய லியேள சியேள யீ அம்மையார் இந்தப் பரிசைப் பெற்றார். 1995ம் ஆண்டில், இந்த அரசுசாரா சுற்று சூழல் பாதுகாப்பு நிறுவனத்தை நிறுவிய பிறகு, லியேள சியேள யீ, சுற்று சூழல் பாதுகாப்பு பற்றிய சுமார் 100 சிறப்பு திரைப்படங்களைத் தயாரித்து, புதுப்பிக்கவல்ல எரியாற்றல் செய்தியாளர் கருத்தரங்கை நடத்தினார். காரின் புகை மாசு வெளியேறுவதைக் குறைத்து எரியாற்றலை சிக்கனப்படுத்த, பொது மக்கள், பொது போக்குவரத்து சாதனங்களைப் பயன்படுத்துமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பேட்டியளித்த அவர், பொருளாதாரத்தின் வேகமான வளர்ச்சி, சீனாவின் சுற்றுச் சூழலுககு மாபெரும் நெருக்குதலைத்தந்ததால், சுற்று சூழல் பாதுகாப்பு பணியில், அரசு, தொழில் நிறுவனங்கள் மற்றும் பொது மக்கள் கூட்டாக ஈடுபட வேண்டும் என்றார். அவர் மேலும் கூறியதாவது:
நான் இப்பரிசு பெறுவது, அரசுசாரா சுற்று சூழல் பாதுகாப்புப் பணியின் மீதான அரசு மற்றும் மக்களின் ஊக்கத்தைப் பிரதிபலிக்கிறது. சீனப்பொருளாதாரத்தின் வளர்ச்சியுடன், மேலும் அதிகமான மக்கள், சமூக நீதியிலும் சுற்று சூழல் பாதுகாப்பிலும் மேலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்றார் அவர்.
இந்த பொருளாதார பிரமுகர் தேர்வு, சீனாவில் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது. இணைய தளங்களில், பத்து லட்சம் மக்கள் வாக்களித்து, இவர்களை தேர்ந்தெடுத்தனர். கடந்த ஓராண்டில், சீனப்பொருளாதார கட்டமைப்பு தொடர்ந்து மேம்பட்டு, தனியார் பொருளாதாரம் மேலும் சுறுசுறுப்பாக வளர்ந்து, உயர் தொழில் நுட்ப நிறுவனங்கள், குறிப்பாக உள்நாட்டுத் தொழில் நுட்ப மற்றும் மைய தொழில் நுட்பத்தைக்கொண்ட தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து அதிகரித்துள்ளன. அத்துடன், சுற்று சூழல் பாதுகாப்பு, எரியாற்றல் சிக்கனம் முதலியவை, சமூகம் முழுவதும் கவனம் செலுத்தும் பிரச்சினைகளாக மாறியுள்ளன. சீனாவின் பொருளாதாரம் மேலும் சீரான ஒருங்கிணைப்பான திசையை நோக்கி வளர்ப்பதையே இவை காட்டுகின்றன என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
|