• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-02-23 16:05:24    
கத்தார் மேசை பந்து ஒப்பன் போட்டி

cri

பிப்ரவரி 18ஆம் நாள் சர்வதேச மேசை பந்து சம்மேளனத்தின் மிக அதிக பரிசு தொகை வழங்கப்படும் கத்தார் மேசை பந்து ஒப்பன் போட்டி நிறைவடைந்தது. அனைத்து முக்கிய விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் இடம்பெறும் சீன அணி, தென் கொரிய அணி கலந்துகொள்ளாத நிலையில் எல்லா நிகழ்ச்சிகளிலும் சாம்பியன் பட்டம் பெற்றது.

ஆடவருக்கான ஒற்றையர் அரை இறுதிப் போட்டிகளில ஒன்று, சீன வீரர் மாலினுக்கும் செக் வீரர் கொப்பேலுக்குமிடையில் நடைபெற்றது. மாலின் தனது தொழில் நுட்பத்தை முழுமையாக வெளிப்படுத்தியதால், ஷாங்கை உலக மேசை பந்து சாம்பியன் பட்டப் போட்டிக்குப் பின் இரண்டாம் முறையாக கொப்பேலைத் தோற்கடித்து இறுதிப் போட்டியில் கலந்துகொள்ள தகுதிப் பெற்றார்.

ஆடவருக்கான மற்றொரு அரை இறுதிப் போட்டி சீன வீரர்களான வாங் லி ச்சினுக்கும் வாங் ஹௌவுக்குமிடையில் நடந்தது. வாங் லி ச்சின் மிகவும் திறமையாக விளையாடியதால் 4-1 என்ற செட் கணக்கில் வாங் ஹௌவைத் தோற்கடித்து இறுதிப் போட்டியில் நுழைந்தார். ஆடவருக்கான ஒற்றையர் இறுதிப் போட்டியில் சீன வீரர் வாங் லி ச்சின் 4-2 என்ற செட் கணக்கில் தனது அணி தோழரான மாலினைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றார்.

மகளிருக்கான ஒற்றையர் அரை இறுதிப் போட்டிகளில் சீன வீராங்கனை சாங் யி நிங்கிற்கும் ஜெர்மனியின் வீராங்கனை ஸ்ட்ரூசேக்குமிடையில் நடந்த போட்டி பார்வையாளர்களின் மனத்தை மிகவும் ஈர்த்தது. முதல் நான்கு செட்களில் இருவரும் 2-2 என்ற நிலையில் இருந்தது, எனவே 5வது, 6வது செட்களில் இருவருக்கிடையில் போட்டி மிகவும் தீவிரமானவை. இறுதியில் சாங் யி நிங் 11-9,12-10 என்ற புள்ளிகளுடன் எதிராளியை தோற்கடித்தார்.

மகளிருக்கான ஒற்றையர் இறுதிப் போட்டியில் சீனாவின் புகழ்பெற்ற வீராங்கனை சாங் யி நிங் 4-1 என்ற செட் கணக்கில் தனது அணி தோழியரான லீ சியௌ சியாவைத் தோற்கடித்து தனது சாம்பியன் பட்ட அந்தஸ்தை பாதுகாத்தார். ஆடவருக்கான இரட்டையர் இறுதிப் போட்டியில் சீன வீரர்களான வாங் லி ச்சின், வாங் ஹௌ ஜோடி 4-1 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் போல், சூஸ் ஜோடியைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது.

மகளிருக்கான இரட்டையர் இறுதிப் போட்டியில் சீன வீராங்கனைகளான சாங் யி நிங், வாங் நான் ஜோடி 4-3 என்ற செட் கணக்கில் சீன ஹாங்காங்கின் சான் யா நா, சாங் ழுய் ஜோடியைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது.