• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-02-19 16:30:59    
வெண்கல பதக்கம் பெற்ற சீன வீராங்கனை

cri

நேற்றிரவு டூரின் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் 1500 மீ்ட்டர் குறுகிய பாதை விரைவுப் பனிச்சறுக்கலின் இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை வாங் மொங் வெண்கலப் பதக்கம் பெற்றார். அரை இறுதிப் போட்டியில் சீன வீராங்கனைகளான செங் சியோ லேவும் யாங் யாங்கும் தோல்வியுற்றனர். வாங் மொங் மட்டும் இறுதிப் போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெற்றார். இறுதிப் போட்டியில் வாங் மொங் நான்காம் இடம் பெற்றார். ஆனால் மூன்றாம் இடம் பெற்ற தென்கொரிய வீராங்கனை BYUN CHUN-SA விதி மீறியதால் அவருடைய சாதனை நீக்கப்பட்டது. இறுதியில் வாங் மொங் வெண்கல பதக்கம் பெற்றார். தென் கொரியாவின் JIN SUN-YU தங்கப் பதக்கமும் CHOI EUN-KYUNG வெள்ளி பதக்கமும் பெற்றனர். தவிரவும், நேற்று நடைபெற்ற ஆடவருக்கான 1000 மீட்டர் குறுகிய பாதை விரைவுப் பனிச்சறுக்கல் போட்டியில் சீன வீரர் லீ யே 5ஆம் இடம் பெற்றார்.