• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-02-21 08:48:08    
கோஸ் சுருள் சமோசா

cri

கலை.......வணக்கம் நேயர்களே. இப்போது சீன உணவு அரங்கம் நிகழ்ச்சி நேரம். இன்று ராஜாராமும் தி. கலையரசியும் மகிழ்ச்சியுடன் உங்களுடன் சேர்ந்து சமையலறை விஷயம் பற்றி விவாதிக்கின்றோம்.

ராஜா.....உடம்பின் செரிமாண சக்தி அதிகரிப்பதற்கு இலைக் காய்களை அதாவது கீரை வகைகளை அதிகம் சாப்பிடணும். அதுக்காக இன்றைக்கு முட்டைக் கோஸ் அல்லது கேபேஜ் கொண்டு செய்யப்படும் ஒரு வகையான தின்பணடம் எவ்வாறு சமைப்பது என்று சொல்லப்போறோம்.

கலை....கேபேஜ், கோஸ் இரண்டும் ஒன்று தானா?

ராஜா.....ஆமாம். கோஸ் வைத்து விதம் விதமா சமைக்கலாம். கோஸ்பொரியல், கோஸ் கூட்டு, கோஸ்பரி. அப்புறம் கேரள மாநிலத்தின் துவரன் இந்த மாதிரி......இன்றைக்கு நாம கோஸ்சுருள் சமோசா செய்யப் போறோம். இது வித்தியாசமானது. ஏன்னா இதுக்கு எண்ணெய் தேவை இல்லை.

கலை.....சரி என்னென்ன பொருட்கள் வேணும்?

ராஜா.....குறிச்சுக் கோங்க. முதலில் இரண்டு பெரிய கோஸ் இலைகள் அதாவது முட்டைக் கோஸில் இருந்து இலையை பெரிதாக பிய்த்து எடுக்கணும்.

250 கிராம் கீரை பாலக் கீரை அல்லது இலை அகலமான கீரை எடுத்துக் கொள்ளலாம். 100 கிராம் முளைப்பருப்பு பாசிப்பயற்றை முளைக் கட்டி எடுக்கலாம். காராமணிப் பயனும் வைத்துக் கொள்ளலாம். 50 கிராம் கேரட் துருவல்.

கலை.....திரும்பச் சொல்றேன். 250 கிராம் கீரை பாலக் கீரை அல்லது இலை அகலமான கீரை எடுத்துக் கொள்ளலாம். 100 கிராம் முளைப்பருப்பு பாசிப்பயற்றை முளைக் கட்டி எடுக்கலாம். காராமணிப் பயனும் வைத்துக் கொள்ளலாம். 50 கிராம் கேரட் துருவல். இவ்வளவு தானா?

ராஜா....இன்னும் இருக்கு. 50 கிராம் கொத்துக் கறி சைவ்ப் பிரியர்களுக்கு இது வேண்டாம். பதிலுக்கு உருளைக் கிழங்கு மசியல் எடுத்துக் கொள்ளலாம். 5 கிராம் தக்காளி சாஸ், 5 கிராம் மிளகுத் தூள். 5 கிராம் இஞ்சி பொடியாக நறுக்கியது. 5 கிராம் வெள்ளைப் பூண்டு விழுது.

கலை.....இதையும் திருப்பிச் சொல்றேன். 50 கிராம் கொத்துக் கறி சைவ் பிரியர்களுக்கு இது வேண்டாம். பதிலுக்கு உருளைக் கிழங்கு மசியல் எடுத்துக் கொள்ளலாம். 5 கிராம் தக்காளி சாஸ், 5 கிராம் மிளகுத் தூள். 5 கிராம் இஞ்சி பொடியாக நறுக்கியது. 5 கிராம் வெள்ளைப் பூண்டு விழுது.

இனி என்ன செய்யணும்?

ராஜா.....நறுக்கிய கீரை முளைப்பருப்பு, கேரட் துருவல் இவற்றை நன்றாகக் கொதிக்கும் நீரில் போட்டு எடுத்து ஒவ்வொரு கோஸ் இலை மீதும் பரப்பி, அதைச் சுருட்டணும். அப்புறம், அந்தச் சுருளை 5 சென்டி மீட்டர் துண்டுகளாக நறுக்கணும். பிறகு, கொத்துக் கறி, மிளகுத் தூள், இஞ்சி, பூண்டு, சால் மசாலாவை லேசா எண்ணெய் விட்டு வதக்கி இந்தச் சுருளுக்குள் திணிக்கணும். அதன் பிறகு சுருள்களை நீராவியில் வேக விடணும். 5 அல்லது 6 நிமிடங்கள் வெந்ததும் சுவையான கோஸ் சுருள் சமோசா தயார்.