 29 வயதான மலேசிய மங்கை ஒருவர், தாம் பிறந்த நாள் முதல் சட்டை போட விரும்பவில்லை. சாதாரண மக்கள் போல அவளால் நடக்க முடியவில்லை. பாம்பு போல் தரையில் ஊர்ந்து தான் செல்ல முடியும். வயிறு நிறைய சாப்பிட்டு விடும் போதெல்லாம், பாம்பு போல் தரையில் சுருண்டு உறங்குவாள். அதனால் அண்டை வீட்டுக்காரர்கள் அவளை பாம்பு பெண் என அழைக்கிறார்கள். இந்தப் பெண்ணின் பெற்றோர், அவளை சிகிச்சை செய்ய பல புகழ்பெற்ற மருத்துவர்களைத் தேடிப்பார்த்தார்கள். ஆனால் பயன் கிடைக்கவில்லை.
உலகமெங்கும் ஆண்டுதோறும் பேறுகாலப் பிரச்சினைகளால் ஐந்து லட்சத்து இருபத்தொன்பது ஆயிரம் பெண்களும், ஒரு கோடியே ஆறு லட்சம் குழந்தைகலும் மரணமடைகிறார்கள். இதில் முப்பத்தி மூன்று லட்சம் குழந்தைகள் இறந்தே பிறக்கின்றன. பணிரண்டு நாடுகளில் சாவு எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஹாங்ஹாங் நாட்டு பல்கலைக்கழகம் சமீபத்தில் ஒரு அபூர்வ கணக்கெடுப்பை நடத்தியது. அதில் 5700 பேர் அதிக அளவு புகை படித்ததால் இறந்துள்ளதாகவும், 6400 பேர் சோம்பலாக வீட்டில் இருந்ததால் இறந்துள்ளதாகவும் தெரிய வந்தது. மேலும் சோம்பலாக வேலை எதுவும் இன்றி இருப்பவர்களின் எண்ணிக்கை ஹாங்ஹாங்கில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதாகம். இதனால் வேலை எதுவும் இன்றி சோம்பலாக வீட்டில் இருப்பவர்களுக்கும் அபராதம் விதிக்க ஹாங்ஹாங் அரசு தீவிரமாக யோசித்து வருகிறது.
இந்தியாவில் உள்ள வங்கிகளில் பணம் டெபாசிட் செய்து விட்டு ரூ.50, ரூ.25 என்று தங்கள் கணக்கை முடித்து பணம் பெறாமல் விட்டு விட்டவர்கள் ஏராளம். இவ்வாறு விடப்பட்ட பணத்தின் மொத்த மதிப்பு ரூ.300 கோடி. இந்த தொகை கடந்த 16 ஆண்டுகளாக பல்வேறு வங்கிகளின் தேங்கி கிடக்கிறது.
முன்பெல்லாம் இந்திய மாணவர்கள் அமெரிக்க பல்கலைக்கழகங்களை நாடி சென்றனர். ஆனால், தற்போது இந்திய பல்கலைக்கழகங்களில் படிக்கவே அமெரிக்க மாணவர்கள் அதிகம் விரும்புகின்றனர் என்று சர்வதேச கல்வி நிறுவனம் அறிவித்துள்ளது.
|