• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-02-23 10:39:34    
மத்திய ஆசிய ஒத்துழைப்பு நிறுவனம்

cri

மத்திய ஆசிய ஒத்துழைப்பு நிறுவனம் என்றால் என்னி அதற்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பிற்கும் வித்தியாசம் உண்டா? என்று சில நேயர்கள் கடிதமூலம் கேட்டுள்ளார்கள்.

மத்திய ஆசிய ஒத்துழைப்பு அமைப்பின் முந்திய பெயர் 1998ம் ஆண்டில் நிறுவப்பட்ட மத்திய ஆசிய பொருளாதார பொது சமூகமாகும். கசாகிஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெக்ஸ்தான், தாஜிகிஸ்தான் ஆகிய நான்கு நாடுகள் இவ்வமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன.

உறுப்பு நாடுகளிடையில் அரசியல், பொருளாதாரம், அறிவியல் தொழில் நுட்பம் முதலிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, சுதந்திரம் இறையாண்மை போன்ற முக்கிய பிரச்சினைகளில் பரஸ்பரம் ஆதரவையும் உதவியையும் அளிப்பது, எல்லைப் புறம் மற்றும் சுங்க துறை கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் இணக்கம் செய்வது, ஒருமைப்பாடான பொருளாதார திட்டத்தை பகுதி பகுதியாக நிறுவுவது என்பன இவ்வமைப்பின் கடமைகளாகும். ரஷியா 2004ம் ஆண்டில் இவ்வமைப்பின் உறுப்பினராக சேர்ந்தது. கடந்த சில ஆண்டுகளில் மத்திய ஆசிய நாடுகளில் தீவிரமாகிவரும் பயங்கரவாத நடவடிக்கைகளின் பின்னணியில் சொந்த வட்டாரத்தில் அமைதியையும் நிதானத்தையும் பேணிக்காக்கும் வகையில் பயங்கரவாதம், மத அடிப்படை வாதம், போதை பொருட்கள் ஆகியவற்றை இணைந்து ஒடுக்கும் ஒத்துழைப்பை இந்த அமைப்பு வலுப்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் திங்கள் 6ம் நாள் மத்திய ஆசிய ஒத்துழைப்பு அமைப்பு ரஷியாவின் செயின் பீட்டர்ஸ்பர்கில் கூட்டம் நடத்தி இந்த அமைப்பை ஐரோப்பிய ஆசிய பொருளாதார பொது சமூகத்தில் சேர்ப்பதென்ற தீர்மானத்தை நிறைவேற்றியது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு 2001ம் ஆண்டு ஜுன் திங்களில் நிறுவப்பட்டது. உறுப்பு நாடுகளில் மத்திய ஆசிய ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பினர்களோடு கூடுதலாக சீனாவும் இதில் உள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு நிறுவனம் "ஷாங்காய் 5 நாடுகளின்"அதிபர்களின் சந்திப்பின் அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளது. வட்டாரத் தன்மை கொண்ட பல தரப்பு ஒத்துழைப்பு நிறுவனமாக இது திகழ்கின்றது. பயங்கரவாதம், தீவிரவாதம் ஆகியவற்றை ஒடுக்குவதில் மத்திய ஆசிய ஒத்துழைப்பு அமைப்பு போல் இதற்கும் திறமை உண்டு.