• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-02-21 11:04:20    
பெங்ஷுயி ஒரு மூடநம்பிக்கையா?

cri
சில நாட்களுக்கு முன்பு சீனா வானொலி தமிழ் ஒலிபரப்பில் பெஃங்ஷுய் பற்றி ஒலிபரப்பினோம். அது தொடர்பாக ஏராளமான நேயர்கள் பலவிளக்கங்கள் கேட்டு கடிதம் எழுதினார்கள். அண்மையில் பெஃங்ஷுய் பயிற்சித்திட்டம் ஒன்று சீனப் பெருநிலப்பகுதியில் தொடங்கப்பட்டது. அதே வேளையில், இந்த பெஃங்ஷுய் அறிவியலா? அல்லது வெறும் மூடநம்பிக்கையா? என்று விவாதமும் சீனாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் நடைபெறுகிறது. இது பற்றி இன்றைய சீனப் பண்பாடு நிகழ்ச்சியில் ஒரு உரைச்சித்திரம் கேளுங்கள்.

பெஃங்ஷுய் என்றால் காற்றும், நீரும், சீன மொழியில் பெஃங் என்றால் காற்று. ஷுய் என்றால் தண்ணீர். அதாவது, மண்ணும், விண்ணும், மனிதர்களும் இந்த முழு பிரபஞ்சத்தின் பகுதிகள் என்ற தாவோ மதக் கோட்பாடுகளின் அடிப்படையில், பல நூறு ஆண்டுகளாக சீன மக்களின் பண்பாட்டில் பெஃங் ஷுவய் இரண்டறக் கலந்து விட்டது. இது புவியியல், கட்டிடக்கலை, அறம் மற்றும் தேவவாக்கு என்ற அம்சங்கள் ஒருங்கிணைந்து கலந்த ஒரு துறையாகத் திகழ்கிறது.

பூமியின் காந்த வயலினால் ஒரு கட்டிட்டம் எந்த அளவுக்குப் பாதிக்கப்படும் என்று கண்க்கிடுவதே பெங் ஷுய். மேலும் ஒரு கட்டிடத்தைக் கட்டும் போது காற்றோட்டம், சூரிய வெளிச்சம் படும் கோணம், இரைச்சல் போன்ற அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்படுகின்றன. நல்ல பெங் ஷுய், தீய சக்திகளை விரட்டியடித்து, வாழ்க்கையில் வளம் சேர்க்கும். குடும்பத்தில் அதிக சச்சரவுகள் வராது. குழந்தைகள் கெட்டிக்காரர்களாக வளர்வார்கள். விவாகரத்து ஏற்படாது. இந்த நம்பிக்கையில் பெங் ஷுய் நிபுணர்களை மக்கள் அணுகுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில், அண்மையில், சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள பெருமைமிகு நாஞ்சிங் பல்கலைக்கழகமும், கட்டுமான அமைச்சகத்தின் சீனக் கட்டிடக் கலை மையமும் சேர்ந்து, சீனாவின் பாரம்பரியக் கட்டிடக்கலை பற்றியும், பண்டைய பெஃங்ஷுய் பழக்கம் பற்றியும் ஒரு பயிற்சி வகுப்பு நடத்தின.

ஒரு பல்கலைக்கழகமும், அரசின் துறையும் சேர்ந்து பெஃங்ஷுய் பற்றி பயிற்சி வகுப்பு நடத்துகிறது என்றால் இது ஒரு அறிவியல் துறை தான் என்கின்றனர், பெரும்பாலான மக்கள். அல்ல, அல்ல இது அறிவியல் அல்ல, இது ஒரு மூடநம்பிக்கை என்று அடித்துப் பேசுகின்றனர் பகுத்தறிவு வாதிகள். உண்மையில், பெஃங்ஷுய் அறிவியலா? மூடநம்பிக்கையா?