• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-02-22 10:28:10    
லுஷின் கதை பற்றிய கருத்துக்கள்

cri

வணக்கம் நேயர்களே. முதலில் சீனக்கதை நிகழ்ச்சியில் ஒலிபரப்பான லுஷின் அவர்களின் பைத்தியக்காரனின் டைரி என்ற தொடர்கதை பற்றி நேயர்களின் மாறுபட்ட கருத்துக்கள் வந்துள்ளன. மிகவும் வித்தியாசமான கோணத்தில் எழுதப்பட்ட கதை. சமுதாயத்தில் பலபேரிடம் உள்ள மறைமுகமான எண்ணங்களை லுஷின் கதையாகத்தந்தவிதம் அருமை என்று கோவை மாவட்டம் தென்பொன்முடி நேயர்கள் மணிகண்டன் நாகமணி இருவரும் பாராட்டியுள்ள போது, இது தேவையில்லாத கதை. அறிவியலில் வளர்ந்து வரும் மாணவர்களுக்கு இதனால் என்ன பயன் என்று கேட்கிறார் நீலகிரி மாவட்டம் கீழ்குந்தா நேயர் கே.கே. போஜன் மனிதமாமிசத்தை தின்பது என்பதும் மனித ரத்தத்தில் ரொட்டியைத் தோய்த்து தின்பது என்பதும் அருவருப்பாக உள்ளது என்கிறார் இவர். ஆனால், இந்தக் கதை மனுசனை மனுசன் சாப்பிடுகின்றான் என்ற கருத்தை வலியுறுத்தகிறது. இதைக் கோட்ட போது பட்டுக் கோட்டை கல்யான சுந்தரம் எழுதிய மனுசனை மனுசன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே என்ற பாடல்தான் எனக்கு நினைவுக்கு வந்தது என்று கூறுகிறார் சின்னவளையம் நேயர் கு. மாரிமுத்து, கதையில் மட்டும் மனிதர்கள் மனித மாமிசம் தின்னவில்லை. உலகில் எங்கு பார்த்தாலும் பயங்கரவாதிகளின் அட்டூழியம் தற்கொலை குண்டு வெடிப்பு போன்றவை நடக்கும் போது. இந்தச் சீனக்கதை மிகவும் பொருத்தமாக இருக்கிறது என்று பாராட்டியுள்ளார். மகாராஸ்டர மாநிலம் ரிசோட் என்ற ஊரில் இருந்து நேயர் மாயாண்டி.

வாணி— ஒவ்வொருடைய பார்வை ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. இந்தக் கதையை மேலோட்டாகப் பார்க்கக் கூடாது. மருந்து என்ற கதை பற்றி இங்கே விளக்கம் செல்ல விரும்புகிறேன். கதையில் கொலை செய்யப்பட்ட இளைஞன், சமூகத்தின் ஏழை மக்களை விடுதலை செய்வதற்காக அதாவது சீன புரட்சி இலட்சியத்தின் வெற்றிக்காக தியாகம் செய்தவன். ஆனால், மூட நம்பிக்கையுடைய ஏழை மக்கள் இது பற்றி ஒன்றும் தெரியாமல் அந்த இளைஞரின் ரத்தத்தை தின்றனர். இது அப்போதைய சமூகத்தில் cothurnus ஆகும். இந்த பின்னணி அறிந்த பிறகு, கதையை நன்றாக புரிந்து கொள்ளலாம். ஒரு விஷயம் தெரியுமா? Luxun அவர்களை சீன தேசத்தின் மனச்சாட்சி என்று தலைவர் மாவோ பாராட்டினார். மேலும், Luxun எழுதிய கதைகளை படிக்காத சீன மாணவர்களே இல்லை என்று சொல்லலாம்.

ரா-- சேந்தமங்கலம் எஸ்.ஹரிஹரன் கண்ணமங்கலம் நிவேதிதா இருவரும் சீனக் கதை நிகழ்ச்சியில் இடம்பெற்ற குட்டிக் கதைகளைப் பாராட்டியுள்ளனர். நிவேதிதா தமது கடிதத்தில், நட்புப்பாலம் நிகழ்ச்சியில் பேட்டியளித்த சாரதா அம்மையார் இந்திய மாணவர்களின் கற்கும் திறனைக் குறைத்து, சீன மாணவர்களின் திறனை உயர்த்திக் கொண்டோம் என்கிறார் மீனாட்சிபாளையம் கா. அருண் கூறியது நன்றாக இல்லை என்கிறார். இலங்கை காத்தான்குடி நேயர் மு.ரா.பாரிகாஸா, சீனக் கதைகள் மூலம் சீன நாட்டின் புராதன பழக்க வழக்கங்களைத் தெரிந்து கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். சாரதா அம்மையார் பேட்டி மூலம் சீன மாணவர்கள் கெட்டிக்காரர்கள் என்பதை புரிந்து கொண்டதாகக் கூறுகின்றார்.

வாணி-- நேயர்களின் பாராட்டுக்கும், கருத்துக்கும் நன்றி, சரி, ராஜா அடுத்த கடிதம்.

ராஜா—நாகர்கோவில் இருந்து ஸ்டாலின், பிரின்ஸ் ராபர்ட்சிங் இருவரும் எழுதிய கடிதங்கள். சீன விவசாயிகளுக்கு வரியை நீக்கிய சீன அரசை ஸ்டாலின் பாராட்டியுள்ளார். நவம்பர் 20 அன்று ஒலிபரப்பான அமெரிக்க அதிபர் புஷின் சீனப் பயணம் பற்றிய செய்தியைச் சுட்டிக்காட்டிய பிரின்ஸ் ராபர்ட்சிங், பெய்ஜிங்கில் உல்ள சர்ச்சில் புஷ் ஒரு மணி நேரம் பிரார்த்தனை செய்துவிட்டு, சீனாவில் மேலும் மத சுதந்திரம் வேண்டும் என்று பேசியிருப்பது உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்வது போல என்று குறிப்பிட்டுள்ளார்.