• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-03-02 14:42:38    
குவாங்சோ நகரில் மலர்ச் சந்தையும் சுற்றுலாவும்

cri

தென் சீனாவில் அமைந்துள்ள குவாங்சோ மாநகரம் புகழ்பெற்ற வரலாற்று நகரமும் சுற்றுலா தலமும் ஆகும். சீனாவின் புகழ்பெற்ற மலர் நகரான குவாங்சோவின் காலநிலை மனிதருக்கு ஏற்றது. 4 பருவங்களிலும் மலர்கள் மலர்கின்றன. சீனச் சந்திர நாட்காட்டியின் படி புதிய ஆண்டு வரும் போதெல்லாம், அங்குள்ள மக்கள் தத்தமது வீடுகளிலோ அலுவலகங்களிலோ மலர்களை வாங்கி அலங்காரம் செய்வது வழக்கமாயிற்று. வண்ண நிறமுடைய உயிர்த்துடிப்புடன் கூடிய மலர்கள், புதிய ஆண்டுக்கு நல்ல பாக்கியம் தரும் என்பது அவர்களுடைய கருத்து. ஆண்டுதோறும், மலர்ச்சந்தை திறந்துவிடப்பட்டதும் ஏராளமான பயணிகள் மலர்களை வாங்குவர். வசந்த விழாவுக்கு முந்திய நாள் இரவு சாப்பாட்டுக்குப் பின், குவாங்சோ நகரவாசிகள், மலர்ச்சந்தைக்குச் சென்று நீ முந்தி, நான் முந்தி என்று மலர்களைப் போட்டிபோட்டு வாங்கி வீடு திரும்புவர்.

மலர்ச்சந்தையில் விற்கப்படும் மலர் வகைகளில், Peony, chrysanthemum(கொத்து மலர்),ரோஜா, மஞ்சள் குவளை மலர், கள்ளி முதலியவையும் மங்களச் சின்னமாக விளங்கும் orange செடியும் அடங்கும். குவாங்சோ நகரிலுள்ள மலர்ச்சந்தை, 200 ஆண்டு வரலாறுடையது. ஆண்டுதோறும் மலர்ச்சந்தை நடத்தப்பட்ட போதிலும், ஒவ்வோர் ஆண்டும் அதற்குப் புதிய அம்சங்கள் உண்டு. வசந்த விழா மலர்ச்சந்தைக்குப் பொறுப்பான சென்ஸ்டா கூறியதாவது, இவ்வாண்டு, குவாங்சோ நகரில் மலர்ச்சந்தை சுற்றுலாவுடன் இணைக்கப்பட்டிருக்கின்றது. குவாங்சோ மலர்ச்சந்தையில் ஒரு நாள் பயணம் என்ற நடவடிக்கை ஏற்பாடு செய்யப்படுவதாகக் கூறினார். மலர்ச்சந்தையில் சுற்றுலா செய்வதை ஒரு நாள் பயணத்தின் முக்கிய அம்சமாக ஏற்பாடு செய்வது ஒரு நல்ல யோசனை. நேயர்கள், வசந்த விழாவின் போது சீனாவின் பல்வேறு இடங்களில் பயணம் மேற்கொள்ள விரும்புகிறீர்களா? வாய்ப்பு இருந்தால் வாருங்கள். இத்துடன் இன்றைய சீனாவில் இன்பப் பயணம் நிகழ்ச்சி நிறைவடைகின்றது. வணக்கம் நேயர்களே. சீனாவில் வசந்த விழாவின் போது, கோயில் விழா சரி, விளக்கு விழா சரி, மலர்ச்சந்தை சரி அவை அனைத்தும் தேசிய இனப் பழக்க வழக்கங்களுடன் கூடிய நடவடிக்கைகள்.

அவை, பயணிகளின் கண்களுக்கு விருந்து அளிக்கும். அதே வேளையில் சீனாவின் தனிச்சிறப்பு வாய்ந்த சிற்றுண்டியைச் சுவைத்துப் பார்க்கும் நல்ல வாய்ப்பும் ஆகும். உண்ணுவது, விளையாடுவது ஆகியவற்றைத் தவிர, சீனாவின் தனிச்சிறப்பு மிக்க கிராமப்புறக் கலைப் பொருட்களான காகிதக் கத்தரிப்பு, களிமண், பட்டம், விளக்கு முதலியவற்றைப் பயணிகள் வாங்கலாம். கலை கைவினைப்பொருடகள் விற்பனையாகும் கடைகளுடன் ஒப்பிடும் போது, இத்தகைய கைவினைப் பொருட்கள் மேலும் நேர்த்தியானவை. இயல்பானவை. விலையும் மலிவானது. தற்போது குவாங்சோ மாநகரின் தொடர்புடைய வாரியங்கள், உயிரின வாழ்க்கை சுற்றுலா, கண்காட்சி சுற்றுலா, அறிவியல் தொழில் நுட்பச் சுற்றுலா, வேளாண் சுற்றுலா, தொழிற்துறை சுற்றுலா, உடல் நலக் காப்புச் சுற்றுலா ஆகியவற்றை ஏற்பாடு செய்துள்ளன. இவற்றில், ஒரு நாள் பயணம், தனிச்சிறப்பியல்பு வாய்ந்த சுற்றுலா முதலியவை உள் நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளின் சிறந்த தெரிவாகத் திகழ்கின்றன. சுற்றுலா வகைகள், பின்வருமாறு, குவாங்சோவில் ஒரு நாள் சுற்றுலா, முத்து ஆற்றங் கரையிலான பண்பாட்டு வரலாற்றுச் சின்ன சுற்றுலா, அண்மைக்கால புரட்சி வரலாற்றுச் சின்ன சுற்றுலா, பண்டைக் கால வணிக நகரச் சுற்றுலா, வின்நான் பூங்கா பண்பாட்டுச் சுற்றுலா, குவாங்சோ மௌவென் மலை உயிரின வாழ்க்கை சுற்றுலா, முத்து ஆற்று இரவு சுற்றுலா என்பனவாகும். தற்போது, குவாங்சோவில், 1570க்கும் அதிகமான உணவு விடுதிகள் உள்ளன.

இவற்றில் 190, நட்சத்திர நிலை உணவு விடுதிகளாகும். தவிர, நட்சத்திர நிலை சேவை வரையறையை எட்டிய உணவு விடுதிகளும் மலிவான உணவு விடுதிகளும் பல உள்ளன. ஒரு நாளுக்கு 2 லட்சத்துக்கு அதிகமான பயணிகளை அவை வரவேற்க முடியும் என்று வழிகாட்டி யெச்சியெ கூறினார். அவர் மேலும் கூறுகிறார், குவாங்சோ மக்கள் பெயுன் மலையை விரும்புகின்றனர். நேரம் கிடைக்கும் போது, அங்குச் சென்று தூய்மையான காற்றை சுவாசிக்கின்றனர். வசந்த கால அறிவிப்புப் பள்ளத்தாக்கு, peack மலர் சிற்றாறு, நன்லன் கோயில், வான் மூட்டும் மலை உள்ளிட்ட காட்சித் தலங்கள், ஈர்ப்புத் தன்மை வாய்ந்தவை என்றார்.