சீனாவின் வளர்ச்சி, உலகத்துக்கு அச்சுறுத்தலாக இல்லாமல், வாய்ப்பாக உள்ளது என்றும், தனது பொருளாதார வளர்ச்சியின் பயனை உலகில் பல்வேறு நாடுகளுடன் சீனா பகிர்ந்து கொள்கிறது என்றும் சீன வெளியுறவு பல்கலைக்கழகத்தின் தலைவர் Wu Jian Min கூறியுள்ளார். நேற்று பெய்ஜிங்கில் பேசிய அவர், கடந்த சில ஆண்டுகளாக, பல்வேறு நாடுகளின் முதலீட்டை சீனா ஈர்த்து, விரைவான பொருளாதார வளர்ச்சி அடையும் வேலையில், அதன் பயனை முதலீட்டாளர்களுக்கும் தந்துள்ளது என்றார். கடந்த சில ஆண்டுகளில், சீன-அமெரிக்க வர்த்தகத்தின் மூலம் அமெரிக்க நுகர்வோர் பெற்றுள்ள ஆதாயம் 60 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் என்று அவர் புள்ளி விபரத்தை மேற்கோள் காட்டிப் பேசினார். சீனப் பொருளாதார வளர்ச்சி, 10 விழுக்காடு என்ற உயர் விகிதத்தை நெருங்கியுள்ள போதிலும், இன்னுமும் பூர்வாங்க வளர்ச்சிக் கட்டத்திலேயே இருக்கின்றது என்று Wu Jian Min கூறினார்.
|