• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-02-24 20:41:59    
தங்கப் பதக்கம் பெற்ற சீன வீரர் ஹான் சியௌ பொங்

cri

பிப்ரவரி 23ஆம் நாள் இத்தாலியின் டுரின் நகரில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் ஆடவருக்கான சுயேச்சைப்பாணி ஸ்கியிங் தாவல் இறுதிப் போட்டியில் சீன வீரர் ஹான் சியோ பொங் தங்கப் பதக்கம் வென்று சாம்பியன் பட்டம் பெற்றார். குளிர்கால ஒலிம்பிக்கின் உறைப்பனி விளையாட்டுகளில் சீன வீரர் ஒருவர் பெற்ற முதலாவது தங்கப் பதக்கம் இது. குளிர்கால ஒலிம்பிக் வரலாற்றிலேயே சீன ஆடவர் பெற்றுள்ள முதலாவது தங்கம் இது என்றும் சொல்லலாம்.

2006ஆம் ஆண்டு டுரின் குளிர்கால ஒலிம்பிக்கின் ஆடவருக்கான சுயேச்சைப் பாணி ஸ்கியிங் தாவுதலின் தகுதிப் போட்டியில் சாவ்ஸ்-துர்க்ஸ் உறைப்பனித் தளத்தில் நடைபெற்றது. ஹான் சியோ பொங் மிகவும் சிறப்பாக விளையாடியதால், 250.45 என்ற புள்ளிகளைப் பெற்று முதலிடம் பெற்றார்.