• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-02-24 15:06:24    
மகளிர் வாழ்க்கையிலான புதுமைத்தன்மை பரிசு

cri

2005ம் ஆண்டின் அக்டோபர் 15ம் நாள் உலக கிராமப்புற மகளிர் நாளாக கொண்டாடப்பட்டது. சீனாவிலுள்ள இரு கிராமப்புற பெண்கள் 2005ம் ஆண்டின் கிராம மகளிர் வாழ்க்கையில் புத்தாக்கப் பரிசு பெற்றுள்ளனர். இவர்களில் ஒருவர், சீனாவில் முதலாவது பதிவுச் செய்யப்பட்ட விவசாயி சங்கத்தை உருவாக்கிய வேலை செய்து சம்பாதித்த 10 லட்சம் யுவான் வருமானத்தை, வேளாண் வளர்ச்சியில் முதலீடு செய்தவர் wangshuxiu அவர்களும் பிற நாடுகளின் 18 பெண்களுடன், 2005ம் ஆண்டின் கிராமப்புற மகளிர் வாழ்க்கையில் புத்தாக்கம் செய்ததற்கான பரிசு பெற்றுள்ளனர். தற்போது நாம், இரு பெண்களைப்பற்றி அறிந்து கொள்வோம்.

37 வயதான சாங்பீன், , சாங்சி மாநிலத்தின் யூங்ச்சி நகரான பூச்சோ சாச்சி கிராமபுறத்தைச் சேர்ந்த விவசாய் ஆவார். இணைய தளத்தின் மூலம், அவரைப் பற்றிய பல தகவல்களை பார்க்கலாம், அவர் தற்போதைய கிராமப்புற முக்கியமானவர். ஆனால் தமது கிராமத்தில் அவர் தலைவர் அல்ல. பிற அதிகார பதவிகளுடன், அவருக்கு தொடர்பு இல்லை. சீனாவில் முதலாவது விவசாயி சங்கமான சாங்ச்சி யூங்ச்சி நகரத்தின் விவசாயி சங்கத்தை அவர் நிறுவியுனார். இது சீனாவில் மக்கள் நிர்வாக வாரியங்கள் ஏற்றுக் கொண்டு பதிவு செய்த முதலாவது விவசாயி சங்கமாகும். இச்சங்கத்தில், யூச்சி நகரில் உள்ள 35 கிராமப்புறங்களின் 3800 உறுப்பினர்கள் உறுப்பினராக உள்ளனர்.

சந்தை இடர்ப்பாடுகளை கூட்டாக எதிர் கொள்ளும் குழுவான இச்சங்கத்தில் உறுப்பினர்கள், அறிவியல் அனுபவங்களைக் கற்றுக் கொண்டு பொழுது போக்குவதற்கான இடமாகவும் திகழ்கின்றது. பத்து ஆண்டுகளாக கிராமத்தில் சேகரிக்கப்பட்ட கழிவு பொருட்களை நீக்கி கிராம சுற்றுசூழலை மேம்படுத்தியுள்ளனர். தவிர, கை வினைக்கலை நிறுவனங்கள் உள்ளிட்ட சில தொழில்சாலைகளை நிறுவியுள்ளனர். இதன் விளைவாக, கிராம வாசிகளின் வாழ்க்கை முறை தலைகீழாக மாறியுள்ளது. சாங்பீன், முன்னதாக ஒரு துவக்க பள்ளி ஆசிரியாராக இருந்தார். கிராமப்புறத்தின் வாழ்க்கையை ஏன் மாற்ற விரும்புவது என்பது பற்றி, அவர் கூறினார். முறைமுறையாக இப்படி வாழ்க்கின்ற பல கிராமப்புற விவசாய்களை நோக்கிய போது, அவருடைய மனத்தில் ஒரு விருப்பம் ஏற்பட்டது. அவர்களுக்கு முன்பை விட மேலும் நல்லதரமான வாழ்க்கை நடத்துவதற்கு துணை புரிவது தனது கடமை என்றார் அவர்.