கடந்த ஆண்டு, சீனாவில் விவசாயிகளின் தனிநபர் நிகர வருமானம், 3255 யுவானை எட்டியுள்ளது. இது, 2004ஆம் ஆண்டில் இருந்ததை விட 6.2 விழுக்காட்டை அதிகரித்துள்ளது. இன்று தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டி கூட்டத்தில் சீன வேளாண் துறை அமைச்சர் Du Qing Lin இவ்வாறு கூறியுள்ளார். கடந்த சில ஆண்டுகளில், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்கு, சீன அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. விவசாயிகள் மேலும் அதிக நலனைப் பெறச்செய்யும் வகையில், கிராமங்களில் ஒட்டுமொத்த சீர்திருத்தத்தை விரைவுபடுத்தி, வேளாண் வரியை விலக்குவது, தானியத்தை பயிரிடும் விவசாயிகளுக்கு உதவித் தொகையை வழங்குவது ஆகியவை நடவடிக்கைகளில் அடங்கும். தவிர, விவசாயிகள் பலவகை அலுவல்களை வளர்ப்பதை சீன அரசு ஊக்குவித்து, கிராமப்புங்களில் அடிப்படை கல்வியையும் தொழில் முறை கல்வியையும் பெரிதும் வளர்த்துள்ளது. கடந்த ஆண்டு, சீனாவில் மொத்த தானிய விளைச்சல் 48400 கோடி கிலோகிராம் எட்டியுள்ளது. இது, 2004ஆம் ஆண்டில் இருந்ததை விட 1450 கோடி கிலோகிராம் அதிகமாகும்.
|