டூரின் குளிர் ஒலிம்பிக்கில் நேற்றைய போட்டில் சீன அணி ஒரு வெள்ளி பதக்கத்தையும் ஒரு வெண்கல பதக்கத்தையும் வென்றது. இதுவரை சீனா இரண்டு தங்க பதக்கம், 4 வெள்ளி பதக்கம், 5 வெண்கல பதக்கம் உள்ளிட்ட 11 பதக்கங்களை பெற்றுள்ளது.

நேற்று நிறைவடைந்த பெண்களுக்கான குறுகிய பாதை பனி சறுக்கல் ஆட்ட போட்டியின் ஆயிரம் மீட்டர் தொலைவு இறுதி போட்டியில் சீன வீரங்கணை வுவாங் முன் ஒரு நிமிதம் 33.078 வினாடியில் தொலைவு பனி சறுக்கி முடித்து இரண்டாவது இடத்தை வென்றார். சான்பியன் பெருமை தென் கொரியாவுக்குச் சார்ந்தது.

சீன வீரங்கணை யாங் யாங் வெண்கல பதக்கத்தை பெற்றார்.
|