• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-02-27 15:30:12    
வாடகை காரில்

cri

வாடகை காரில்

மற்ற போக்குவரத்து கருவிகளுடன் ஒப்பிடுகையில் வாடகை கார் வெளியேற்றும் புகைமாசு மிகவும் அதிகம் என்று பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று கூறுகிறது. ஒரு கன சென்டி மீட்டருக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் துகள்கள் புகையில் உண்டு. இரண்டாவதாக பேருந்து. அதில் ஒவ்வொரு கன சென்டி மீட்டருக்கு தொன்னூற்றைந்து ஆயிரம் துகள்கள் உண்டு. தனியார் காரில் ஒரு சென்டி மீட்டருக்கு முப்பத்தாறு துகள்கள் உண்டு என்றும் கூறப்பட்டிருக்கிறது.

பருமன் குறைக்கும் உருளைக்கிழங்கு

ஒரு புதிய ரக பருமன் குறைக்கும் உருளைக்கிழங்கு வளர்க்கப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இப்புதிய ரக உருளைக்கிழங்கில் உள்ள கார் போஹைடிரேட் சாதாரண உருளைக்கிழங்கில் இருப்பதை விட, இருப்பத்தாறு விழுக்காடும். வெப்ப ஆற்றல் 33 விழுக்காடும் குறைவாகும். இத்தகைய உருளைக்கிழங்கு, உணவு ஆரோக்கியத்தில் அக்கறை கொண்ட மக்களுக்கு தலைசிறந்த தெரிவாகும்.

இருப்பத்தி மூன்று மரபணுகளுக்கு உயிர் கொடுக்க வல்ல சிரிப்பு

சிரிப்பு என்பது மனிதரின் மரபணுக்களுக்கு உயிர் கொடுக்க முடியும் என்று ஜப்பானிய அறிவியலாளர் ஒருவர் ஆராய்ந்து வருகிறார். அவர் அண்மையில் நடத்திய ஒரு சோதனையில் குறைந்தது இருபத்தி மூன்று வகை மரபணுக்களை சிரிப்பால் தூண்ட முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

சிறப்பு மோட்டார்

நடப்பவரைக் கண்டறிந்து ஒதுங்கிச்செல்லக் கூடிய ஒரு வகை மோட்டார் வாகனத்தை தயாரிக்க பிரிட்டனில் சில தொழில் நுட்ப நிறுவனங்களின் ஆய்வாளர்கள் ஆராய்ந்து வெற்றிபெற்றார்கள். "காப்பாற்றுவது"எனப்படும் முறைமையை இவ்வாகனம் பயன்படுத்துகின்றது. ஒரு குழு ராடர் புலனுணர்வு கருவிகளையும் புறச் சிவப்பு கதிர்ப்பட்டையை கொண்ட நிழல்பட கருவியையும் பயன்படுத்துகிறது. புலனுணர்வு கருவி எதிரில் வரும் நபர்களையும் மிதி வண்டி ஓட்டுபவரையும் கண்டறிய முடியும், நிழல்பட கருவியோ இத்தகவலை உள்ளே பொருத்தப்படும் கணிணிக்கு அனுப்புகிறது. இதனால் இக்கணிணி டிரைவர்களுக்கு தக்க சமயத்தில் நினைவூட்டலாம்.