• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-02-27 17:47:49    
யூ தூண் மோட்டர் வாகனத் தொழில் நிறுவனம்

cri

கடந்த நவம்பர் திங்களில், ஒரு மோட்டர் வாகனம் வடசீனாவின் தியான்சின் மாநகரிலிருந்து புறப்பட்டு, அமெரிக்காவுக்கு சென்றது. இவ்வாண்டில் இந்த வகை 100 மோட்டர் வாகனங்கள், அமெரிக்க சந்தையில் நுழையும். இவற்றைத் தயாரிக்கும் சாங்சேள யூ தூண் வாகன நிறுவனம், பெரிய மற்றும் நடுத்தர வாகனங்களைத் தயாரிக்கும் சீனத் தொழில் நிறுவனங்களில் மிகவும் பெரியது.

யூ தூண், பத்து ஆண்டுகளுக்கு முன், வாகனம் தயாரிக்கும் ஒரு சிரிய தொழிற்சாலை தான். துவக்கத்தில் இந்தத் தொழில் நிறுவனம், சில பொதுவான வகை வாகனங்களைத் தயாரித்தது. ஆனால், முயற்சி மூலம், யூ தூண் தயாரிக்கும் பெரிய மற்றும் நடுத்தர மோட்டர் வாகனங்கள், ரஷியா, எகிப்து, ஈரான், கியூபா உள்ளிட்ட 30 நாடுகள் மற்றும் வட்டாரங்களின் சந்தையில் நுழைந்துள்ளன. அவை, அமெரிக்கச் சந்தையில் நுழைவது குறிப்பிடத்தக்கது.

மோட்டர் வாகனச் சந்தையில் நுழைவதற்கான அமெரிக்காவின் வரையறை மிகவும் உயர்வானது. இதுவரை, ஐரோப்பா, ஜப்பான், தென்கொரியா ஆகியவற்றின் மோட்டர் வாகனங்கள் அமெரிக்கச் சந்தையில் நுழைவது மிகவும் கடினம்.

அமெரிக்காவின் order கிடைத்த பிறகு, யூ தூண்ணின் வெளிநாட்டு சந்தை அலுவலுக்குப் பொறுப்பான பணியாளர்களும் தொழில் நுட்ப வல்லுநர்களும், அமெரிக்க போக்குவரத்துத்துறையின் தொடர்புடைய சட்ட விதிகளையும் தொழில் நுட்ப வரையறையையும் ஆராய்ச்சி செய்கின்றனர்.

சட்டத்தை தவிர, பண்பாட்டு கருத்துக்கள், நுகர்வு வழக்கம், உயர் செலவு முதலிய நிர்பந்தங்கள், வடிவமைப்பாளர்களுக்கு அறை கூவலாக மாறின. எமது செய்தியாளிடம் பேசிய 28 வயதான பொறியியல் வல்லுனர் சூ யூங் சேங், தற்போதைய மோட்டர் வாகனச் சந்தையில், வடிவமைப்பு, முக்கிய இடம் வகிக்கிறது. உறுதியான வலிமை, பாதுகாப்பு, மேம்பட்ட கருவிகள் ஆகியற்றினால், வண்டியின் விற்பனை அளவு நேரடியாக பாதிக்கப்படுகிறது என்றார். அவர் மேலும் கூறியதாவது:

பாதுகாப்பு பற்றி, அமெரிக்கா மிகவும் கண்டிப்பாக இருக்கிறது. பக்க வாட்டு ஜன்னல், கால்பகுதி, இருக்கை முதலியவற்றை மாற்ற வேண்டியுள்ளது என்றார் அவர்.

சுமார் 16 திங்களின் முயற்சி மூலம், அமெரிக்கச் சந்தையின் தேவைக்குப் பொருந்திய மோட்டர் வாகனம் தயாரிக்கப்பட்டது. உண்மையில், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வது, யூ தூண்ணின் ஒரேயொரு சாதனை அல்ல. கடந்த ஆண்டில், அதன் 400 மோட்டர் வண்டிகள் கியூபாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. சீன ஏற்றுமதி மோட்டர் வாகன அளவில் மிகவும் அதிகாமாகும். கடந்த ஆண்டின் முற்பகுதியில், யூ தூண் மோட்டர் வாகனங்களின் வெளிநாட்டு சந்தை விற்பனை வருமானம், 3 கோடியே 70 லட்சம் அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. 2004ம் ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, 7 மடங்கு அதிகரித்துள்ளது. தற்போது, யூ தூண், ஆசியாவில் மிக பெரிய மோட்டர் வாகன தயாரிப்பு தளமாக மாறியுள்ளது. மேம்பட்ட தொழில் நுட்பத்தை பயன்படுத்துவது, வெளிநாட்டு சந்தையில் யூ தூண் வெற்றிபெறுவதற்கு முக்கிய காரணமாகும் என்று ஹெநான் மாநிலத்து வாகன தொழில் சங்கத்தின் தலைமைச் செயலாளர் லியு சியேள மிங் எமது செய்தியாளரிடம் கூறினார்:

உலகில் மிகவும் புகழ்பெற்ற தொழில் நிறுவனத்தின் முன்னேறிய தொழில் நுட்பத்தையும் நிர்வாக அனுபவத்தையும் யூ தூண் கற்றுக்கொள்வதோடு, சின்னம் மற்றும் தொழில் நுட்பத்தில் சுதந்திரத்தன்மையை நிலைநிறுத்தியுள்ளது என்றார் அவர்.