சீனாவின் 6 அரசு சாரா அமைப்புகள் தென் சீனாவின் Jiang Xi மாநிலத்தில் உள்ள சில வறிய கிராமங்களில் வறுமை ஒழிப்பு திட்டப்பணியில் பங்கெடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அரசு சாரா அமைப்புகளின் மூலம், வறுமை ஒழிப்பு திட்ட நிதியை சீன அரசு பெருமளவில் வழங்குவது இதுவே முதன்முறை. அரசாங்கத்தின் வளத்தை பயன்படுத்தி, மேலும் அதிக வறுமை ஒழிப்பு பணிகளில் ஈடுபடும் வாய்ப்புகளை சீனாவின் அரசு சாரா அமைப்புகள் பெறும் என்று கூறப்படுகிறது. இந்த 6 அரசு சாரா அமைப்புகளும், ஒரு கோடியே 10 லட்சம் யுவான் அரசு நிதியைப் பயன்படுத்தி, Jiang Xi மாநிலத்தின் 22 வறிய கிராமங்களில் வறுமை ஒழிப்பு திட்டப்பணிகளை நடத்துகின்றன. அரசாங்கமே, வறுமை ஒழிப்பு பணிகளை மேற்கொள்வது, நிதியை அரசாங்கமே செலவிடுவது என்ற முறையை இது முற்றிலும் மாற்றுகிறது. வறுமை ஒழிப்பில் பங்கெடுப்பது, வறுமை ஒழிப்பு பணிகளின் பயனை உயர்த்துவதற்காக அரசு சாரா அமைப்புக்களின் பங்கெடுப்பு ஊக்குவிக்கப்படுகிறது.
|