"உயிரின வாழ்க்கைச்சூழல் மூலம் விவசாயிகளை வளமடையச் செய்திடும்" நடவடிக்கை, இவ்வாண்டு சீனாவில் அதிகாரப்பூர்வமாக துவங்கப்படும். விசாலமான கிராமப்புறத்தில், தூய்மையான எரியாற்றல் பொருள் பயன்பாட்டை பரவலாக்குவது, விவசாய வள சூழல் பயன்பாட்டில் மாதிரி கிராமம் உருவாக்குவது ஆகியவற்றின் மூலம், விவசாயிகளின் உற்பத்தி மற்றும் உறைவிட வசதிகளை பயன்தரும் முறையில் மேம்படுத்துவது, இந்நடவடிக்கையின் நோக்கமாகும். இவ்வாண்டு, 100 மாவட்டங்களைச் சேர்ந்த 1000 கிராமங்களில், தூய்மையான எரியாற்றல் பொருட்கள் வளர்க்கப்படும். பயிர் பொருளான தண்டுகள், வீட்டுக்குப்பைகள், கழிவு நீர் ஆகியவை, வளமாகப் பயன்படுத்தப்படும். விவசாய தூய்மைக்கேடு தடுக்கப்படும். விளை நிலம், புல்வெளி, நீர்ப்பரப்பு ஆகியவை பேணப்படும். தொழில் வளர்ச்சியை மையமாகக் கொண்ட உயிரின வாழ்க்கைச் சூழல் மூலம் விவசாயிகளை வளம் பெற மாதிரி கிராமம் விரைவில் உருவாக்கப்படும்.
|