
பிப்ரவரி 26ஆம் நாள், 20வது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் டுரின் நகரிலுள்ள ஒலிம்பிக் விளையாட்டு அரங்கத்தில் கோலாகலமாக நிறைவடைந்தன. அடுத்த குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் கனடாவின் VANCOUWER நகராட்சித் தலைவர், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் ரோகேயிடமிருந்து ஐந்து வளையங்கள் உள்ள ஒலிம்பிக் கொடியை பெற்றுக்கொண்டார். பின்னர், உலகின் பல்வேறு இடங்களிலுள்ள புகழ்பெற்ற நட்சத்திர பாடகர் பாடகிகளின் இசை நிகழ்ச்சி நடந்தது. ஒலியில், நிறைவு விழாவில் கலந்துகொண்ட அனைவரும் பாடி, ஆடி, முழு இரவிலும் மகழ்ச்சி கடலில் மூழ்கினர்.
பிப்ரவரி 15ஆம் நாள் இத்தாலியின் டுரின் நகரில் குளிர்கால ஒலிம்பிக்கில் நேற்று நடைபெற்ற 500 மீட்டர் மகளிர் குறுகியப் பாதை விரைவுப் பனிச்சறுக்கலின் இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை வாங் மொங் 44.345 வினாடி என்ற சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். இந்த குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் சீன அணி பெற்றுள்ள முதலாவது தங்கப் பதக்கம் இது. பல்கேரியாவின் புகழ்பெற்ற வீராங்கனை EVGENIA RADANOVA வெள்ளிப் பதக்கமும் கனடாவின் வீராங்கனை ANOUK LEBLANC-BOUCHER வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
இத்தாலியின் டுரின் நகரில் நேற்று நடைபெற்ற குறுகியப் பாதை விரைவுப் பனிச்சறுக்கலில் ஆடவருக்கான 1500 மீட்டர் போட்டியில், சீன வீரர் லீ ஜியா ஜுன் வெண்கல பதக்கம் பெற்றார். இந்த குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் சீன அணி வென்ற முதலாவது பதக்கம் இது. தென் கொரிய வீரர் AHN HYUN-SOO 2 நிமிடம் 25.341 வினாடி என்ற சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். இன்னொரு தென் கொரிய வீரர் LEE HO-SUK இரண்டாம் இடம் பெற்றார். 31வயதான லீ ஜியா ஜுன், நான்காவது முறையாக குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்கின்றார். கடந்த முறை, அவர் இதே போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
டூரின் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் இரட்டையர் இசை நடன பனிச்சறுக்கலின் இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை சாங் தான், வீரர் சாங் ஹௌ ஜோடி வெள்ளிப் பதக்கம் பெற்றது. குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் சீன வீரர்கள் இந்த நிகழ்ச்சியில் பெற்ற மிக சிறந்த சாதனை இதுவாகும். மற்றொரு சீன ஜோடி சென் சியே, சௌ ஹொங் போ வெண்கல பதக்கத்தையும், சீனாவின் வீராங்கனை பாங் ச்சிங், வீரர் தொங் ஜியன் நான்காம் இடத்தையும் பெற்றனர்.
|