• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-03-03 08:41:57    
குளிர்கால ஒலிம்பிக்கில் சீனா பெற்றுள்ள சாதனை

cri

பிப்ரவரி திங்கள் 26ஆம் நாள், குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் வெற்றிகரமாக நிறைவடைந்தன. இந்த போட்டிகளில் சீனா கடந்த முறை போல 2 தங்கப் பதக்கங்களை பெற்றது. ஆனால், மொத்தம் 11 பதக்கங்களைப் பெற்றது. இது வரலாற்றில் மிக சிறந்த சாதனையாகும். இதற்கு முன் நடைபெற்ற 7 முறை குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளிலும் மொத்தம் 22 பதக்கங்களைப் பெற்றது. அவற்றில் நான்கு ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற 19வது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் சீனா மிக கூடுதலாக 8 பதக்கங்களை மட்டும் பெற்றது.

டூரின் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் இரட்டையர் இசை நடன பனிச்சறுக்கலின் இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை சாங் தான், வீரர் சாங் ஹௌ ஜோடி வெள்ளிப் பதக்கம் பெற்றது. குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் சீன வீரர்கள் இந்த நிகழ்ச்சியில் பெற்ற மிக சிறந்த சாதனை இதுவாகும். மற்றொரு சீன ஜோடி சென் சியே, சௌ ஹொங் போ வெண்கல பதக்கத்தையும், சீனாவின் வீராங்கனை பாங் ச்சிங், வீரர் தொங் ஜியன் நான்காம் இடத்தையும் பெற்றனர்.

பிப்ரவரி 23ஆம் நாள் இத்தாலியின் டுரின் நகரில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் ஆடவருக்கான சுயேச்சைப்பாணி ஸ்கியிங் தாவல் இறுதிப் போட்டியில் சீன வீரர் ஹான் சியோ பொங் தங்கப் பதக்கம் வென்று சாம்பியன் பட்டம் பெற்றார். குளிர்கால ஒலிம்பிக்கின் உறைப்பனி விளையாட்டுகளில் சீன வீரர் ஒருவர் பெற்ற முதலாவது தங்கப் பதக்கம் இது. குளிர்கால ஒலிம்பிக் வரலாற்றிலேயே சீன ஆடவர் பெற்றுள்ள முதலாவது தங்கம் இது என்றும் சொல்லலாம்.

நேற்றிரவு டூரின் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் 1500 மீ்ட்டர் குறுகிய பாதை விரைவுப் பனிச்சறுக்கலின் இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை வாங் மொங் வெண்கலப் பதக்கம் பெற்றார்.அரை இறுதிப் போட்டியில் சீன வீராங்கனைகளான செங் சியோ லேவும் யாங் யாங்கும் தோல்வியுற்றனர். வாங் மொங் மட்டும் இறுதிப் போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெற்றார். இறுதிப் போட்டியில் வாங் மொங் நான்காம் இடம் பெற்றார். ஆனால் மூன்றாம் இடம் பெற்ற தென்கொரிய வீராங்கனை BYUN CHUN-SA விதி மீறியதால் அவருடைய சாதனை நீக்கப்பட்டது. இறுதியில் வாங் மொங் வெண்கல பதக்கம் பெற்றார்.