• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-02-28 17:32:39    
மூடநம்பிக்கையா?

cri
மூடநம்பிக்கையான பெங்ஷுய், அறிவியல் என்ற பெயரில் சீனாவுக்கு திரும்பவும் வந்து விட்டது என்று பிரபல விஞ்ஞானக் கதை எழுத்தாளர் தாவோ ஷிலோங் கூறுகிறார். இதே கருத்தை Tsinghua பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், புகழ் மிக்க கட்டிடக்கலை நிபுணருமான Chen Zhihua எதிரொலிக்கிறார். "பெங்ஷுய் அறிவியலே அல்ல. அது சில சவடால் பேர் வழிகளின் பணப்பையை நிரப்புகிறது" என்கிறார். சீனாவின் கிராமப்பகுதிகளில் பெங்ஷுயியை முன்னிட்டு ஒரு துண்டு நிலத்துக்காக குடும்பங்கள் சண்டையிடுகின்றன. இந்தச் சண்டை பல தலைமுறைகளாகத் தொடர்வது வருத்தம் தருகிறது என்று சென் ஷிஹுவா கூறுகிறார்.

சீனாவில் பெங்ஷுயி அதிகாரப்பூர்வமாகத் தடை செய்யப்படவில்லை. ஆனால், "பண்டைய சீனாவின் மூடநம்பிக்கை" என்று சீன அகராதிகளில் விளக்கம் தரப்பட்டுள்ளது. 6500 ஆண்டுகளுக்கு முன்பு YANG SHAO பண்பாட்டுக் காலத்தில் இந்த பெங்ஷுயி தோன்றியது. பலர் இதை மாயமந்திரம் என்கிறார்கள். ஆனால் இது சுற்றுச் சூழலோடு நேயமாக வாழும் ஒரு எளிமையான தத்துவம் என்று கூறுகிறார் பெய்ஜிங் சிவில் எஞ்சினியரிங் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் Han Zenglu நகர வளர்ச்சி பற்றித் திட்டமிடுவதில் நிபுணரான இவர், பண்டைக்கால பெங்ஷுய் குழுக்களின் நுட்பங்களைக் கண்டு வியப்படைகிறார். நகர வளர்ச்சி பற்றி திட்டமிடுவதில், கட்டிடங்களுக்கு இடையே இருக்க வேண்டிய இடைவெளி, குடியிருப்பவர்களின் வசதிகள் போன்ற சமநிலையைப் பராமரிக்க பெங்ஷுயி தத்துவம் வழிகாட்டுகிறது. இன்றைய நவீனக்கட்டுமானங்களில் இந்த நேயம் இல்லை என்கிறார் 68 வயதான ஹான் ஸெங்லு.

மேலும், 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுற்றுச்சூழல் மாறும் போது பெங்ஷுயியும் மாறுகிறது. 1920களில் மேலை நாட்டுக் கட்டிடக்கலை அம்சங்கள் சீனாவுக்குள் நுழைந்த பிறகு பெங்ஷுயி கலையின் புகழ் மங்கத் தொடங்கி விட்டது. உண்மையில், மேற்கத்திய திட்டமிடல் கோட்பாடு சில நூறு ஆண்டுகளுக்கு முன்புதான் தோன்றியது. ஆனால் சீனாவின் பெங்ஷுயிக்கு அடிப்படையான யின்-யாங் கோட்பாடு ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றி விட்டது. இப்போது சீன பாரம்பரிய மருத்துவமும், மேலை மருத்துவமும் கலந்து பயன்படுத்தப்படுவது போல, நகர வளர்ச்சி பற்றி திட்டமிடும் போது மேற்கத்திய திட்டமிடல் முறையுடன், பெங்ஷுய் நுட்பத்தை ஏன் கலக்கக்கூடாது என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

உலகில் பல நாடுகளில் பெங்ஷுயி பிரபலமாகியிருக்கிறது. தென் கொரியாவைச் சேர்ந்த ஒரு மாணவர் முதன்முதலாக 1970களில் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பெங்ஷுய் பற்றி ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றார். ஜப்பானில் குறைந்தது 110 பல்கலைக்கழகங்களில் பெங்ஷுய் நுட்பங்கள் கற்பிக்கப்படுகின்றன. 1980களில் ஐரோப்பாவிலும் பெங்ஷுய் பிரபலமானது. நாஞ்சிங் நகரில் 70 விழுக்காடு கட்டிடங்கள் கட்டப்படுவதற்கு முன்பு பெங்ஷுய் குழுக்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டது. கிராம மக்கள் புது வீடு கட்டுவதாக இருந்தாலும், அல்லது குடும்பத்திலே ஏதாவது கஷ்டங்கள் வந்தாலும் பெங்ஷுய் குருவிடம் வந்து யோசனை கேட்கிறார்கள்.

இது அறிவியலோ, மூடநம்பிக்கையோ, எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் இப்போது பெங்ஷுய் நூற்றுக்கு நூறு பணம் சம்பாதிக்கும் தொழிலாக மாறி விட்டது. இதை பணம் சம்பாதிக்கும் தொழிலாக நடத்தாமல், நாட்டுப்புறப் பண்பாடு மற்றும் கட்டிடக்கலை நுட்பங்கள் என்ற கோணத்தில் மேலும் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்கிறார். ஷாங்கையில் உள்ள Tong Ji பல்கலைக்கழகப் பேராசிரியர் Cai Da Feng, பெங்ஷுயி சரியான முறைப்படி பயன்படுத்தப்படாவிட்டால், அது தவறான பாதையில் இட்டும் செல்லும் மூட நம்பிக்கையாகி விடும். ஆகவே பெங்ஷுய் பயன்பாட்டில் கவனம் தேவை.