• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-03-01 11:39:46    
கடிதம் எப்படி எழுதுவது

cri

ஈரோடு எம். சி. பூபதி சீன வானொலிச் செய்திகள் பிபிசி, செய்திகளுக்கு நிகராக உள்ளன என்று பாராட்டிவிட்டு, தமிழ் ஒலிபரப்புக்கு அதிக அளவு நேயர்கள் இருப்பது மகிழ்ச்சி தருகிறது என்கிறார். நெல்லை மாவட்டம் கடையாலுருட்டி நேயர் எம். பிச்சைமணி, 90 விழுக்காடு எழுதப்படிக்கத் தெரியாத மக்கள் இருந்த சிங்சியாங் மாநிலத்தில் தற்போது 8600 பள்ளிகள் திறக்கப்பட்டிருப்பதால் மக்களின் கல்வியறிவு உயரும் என்கிறார்.

வாணி— நேயர்கள் தெரிவித்த பாராட்டுக்கு நன்றி, உண்மையில், நவ சீனா நிறுவப்பட்ட பின், சிங்ச்சியாங், திபெத் போன்ற சிறுப்பான்மை தன்னாட்சி பிரதேசங்களுக்கு மத்திய அரசு சலுகை காட்டி பல்வேறு துறைகளில் பேருதவி அளிக்கிறது. இது தான், இவை வேகமாக வளர்ச்சி அடைவதற்கான காரணம்.

ராஜா-- சென்னை மணலி நேயர் மாறன், சீனத் தமிழொலி இதழில் வெனியான ரவிச்சந்திரன் பயண அனுபவம் பற்றிய கட்டுரையையும், படங்களையும் பாராட்டியுள்ளார். நவம்பர் 23 கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் சேந்தமங்கலம் எஸ். எம். ரவிச்சந்திரன் அளித்த பேட்டி அருமை என்கிறார். மகாராஷ்ட்ர மாநிலம் ரிசோட்டில் இருந்து கடிதம் எழுதியுள்ள எம். பிரபு பயங்கரவாதிகளை ஒழிப்பதில் சீனா ஒத்துழைப்பதாக செய்திகளில் அறிந்து மகிழ்வதாகக் கூறுகிறார். மேலும், உங்கள் குரல் நிகழ்ச்சியில் பல்லவி பரமசிவம் கூறிய கருத்துக்களையும் நட்புப்பாலம் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஈ.வி. கே.எஸ். இளங்கோவன் அளித்த பேட்டியையும் பாராட்டியுள்ளார். டிசம்பர் 4ஆம் நாள் ஒலிபரப்பான சீன இசை நிகழ்ச்சியில் பாடல்கள் ரசிக்கும்படியாக இருந்தது. மொழிதான் புரியவில்லையே தவிர, இசை மிகவும் நன்றாக இருந்தது என்கிறார் துரையூர்த. குறிஞ்சிக்குமரன். நாகைப்பட்டினம் மாவட்டம் காரியாப்பட்டினம் நேயர் வி, ஆர், புஷ்பராஜன், நவம்பர் 8 செய்திகளைப் பாராட்டியுள்ளார். நாகர் கோவில் ஓய்ஸ்லின் நவம்பர் 18 செய்திகளில், சீனா 56 லட்சம் கார்களை உற்பத்தி செய்து உலகில் ரஷ்யாவை முந்தி இரண்டாவது இடத்தில் இருப்பது மகிழ்ச்சி தருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

வாணி— பாராட்டுக்கு நன்றி நேயர்களே. நேயர் நேரம் நிகழ்ச்சிக்கு நேயர்கள் எழுதி அனுப்பும் கடிதங்கள் தொடர்பாக நான் சில கருத்துக்களைச் சொல்ல வேண்டும்.

ஒன்று, சில நேயர்கள் இலவச உறையில் கடிதங்களை வைத்து அனுப்பும் போது, உறை மீது அஞ்சல் தலை ஒட்டுகிறார்கள். தயவு செய்து அப்படிச் செய்யாதீர்கள். ஏனென்றார்ல உங்களுக்குத் தான் பணம் நஷ்டம். இலவச உறைக்கு ஏற்கனவே சீன வானொலி அஞ்சல் கட்டணம் செலுத்திவிட்டது. எனவே உறையில் கடிதங்களை வைத்து, ஒட்டி அஞ்சல் பெட்டியில் போட்டாலே போதும்.

இரண்டு- உறையில் நீங்கள் 10க்கு மேற்பட்ட கடிதங்களை வைத்தால், உள்ளே எத்தனை கடிதங்கள் வைக்கப்பட்டுள்ளன என்பதை உறை மீது எழுதங்கள். போட்டியில் கலந்து கொண்டு, ஒரே உறையில் அதிக விடைத்தாள்கள் வைக்கப்பட்டன என்பதை ஒரு தனித்தாளில் எண்ணிக்கையைத் தெளிவாக எழுதுங்கள். ஏனென்றால் எத்தனை கடிதங்கள் வந்தன என்று கணக்கு வைப்பதற்கு சீன வானொலியில் தனிப்பிரிவு உள்ளது. பல முறை விடைத்தாள்களை அனுப்பினால், போட்டியின் இறுதியில், தாங்கள் அனுப்பிய விடைத்தாள்களின் மொத்த எண்ணிக்கையையும், முக்கிய நேயர்களின் பெயர் பட்டியலையும் சிறப்பாக அனுப்பவும்.

மூன்று, கடிதங்களுடன் உங்கள் முகவரியை ஓரிரு துண்டுத்தாள்களில் எழுதி வையுங்கள். நான்கு, உங்கள் முகவரி எழுதும் போது கடைசியில் இந்தியா அல்லது இலங்கை என்ற நாட்டுப் பெயரை ஆங்கிலத்தில் எழுதுவது நல்லது.